Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கிருமித்தொற்றுக்கு ஆளாகும் அபாயத்தை, பொதுமக்கள் தேவையின்றி ஏற்படுத்திக்கொள்கிறார்களா?

கடைத் தொகுதிகள், நூலகங்கள், மருத்துவமனைகள் எனப் பொது இடங்கள் பலவற்றிலும் நோய்த்தொற்றுக் குழுமங்கள்...

வாசிப்புநேரம் -

கடைத் தொகுதிகள், நூலகங்கள், மருத்துவமனைகள் எனப் பொது இடங்கள் பலவற்றிலும் நோய்த்தொற்றுக் குழுமங்கள்...

புகைபிடிப்பதற்காக முகக்கவசத்தை அகற்றும்போது, பிறருடன் பேசுவது...

உடற்பயிற்சி செய்ய முகக்கவசத்தை அகற்றிவிட்டு, உடற்பயிற்சி முடிந்த பின் அதை மீண்டும் அணியத் தவறுவது...

அவசரம் ஏதுமில்லை என்றாலும், குடும்பத்தோடு வெளியே செல்வது...

எனப் பொதுமக்கள் தேவையின்றி கிருமித்தொற்றுக்கு ஆளாகும் அபாயத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்களா?

ஆம் என்கிறார் மருத்துவர் கண்ணன்.

அதிகக் காற்றோட்டம் இல்லாத, மூடப்பட்ட உட்புறங்களில், கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் மேலும் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.

கட்டுப்பாடுகளைப் பெயருக்குப் பின்பற்றக்கூடாது, உண்மையாகக் கடைப்பிடிக்க வேண்டும்

என்று டாக்டர் கண்ணன் வலியுறுத்தினார்.

கிருமித்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் ஏற்படக்கூடிய சில சூழல்கள்...

  • சக ஊழியர்களுடன் உணவு உட்கொள்ளும்போது, நெருக்கமாக உட்கார்ந்திருப்பது
  • மற்ற குடும்பத்தினரைக் காணச் செல்லும்போது, முகக்கவசத்தை அகற்றுவது
  • கூட்டமாகப் புகைபிடிக்கும்போது, முகக்கவசமின்றி அரட்டையடிப்பது
  • வெளியே விளையாட்டுத் திடலுக்குச் சென்று விளையாடும் பிள்ளைகள், முகக்கவசமே அணியாமல் இருப்பது
  • வெவ்வேறு வீடுகளில் வேலை செய்யும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள், விடுமுறை நாளன்று, முகக்கவசமின்றிக் கலந்துரையாடுவது

அத்தகைய சூழல்களை எப்படித் தவிர்க்கலாம்?

அதுகுறித்து ஆலோசனைகளை வழங்கினார் மருத்துவர் கற்பகவல்லி.

  • வெளியிடங்களில் எந்நேரமும் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
  • உணவு உட்கொள்ளவோ புகைபிடிக்கவோ முகக்கவசத்தை அகற்றினால், பிறரிடமிருந்து குறைந்தது 1 மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • பெரிய அளவிலான கூட்டங்களில் கலந்துகொள்வதையும், முகக்கவசத்தை அகற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்