Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சிறந்த பிரியாணி செய்வதற்கு அறிவியல் தேவையா?

பிரியாணி என்றாலே பலருக்கும் நாவூறும்.

வாசிப்புநேரம் -

பிரியாணி என்றாலே பலருக்கும் நாவூறும்.

அதைச் சிறப்பாகச் சமைப்பதற்கு, அரிசி, இறைச்சி, நறுமணப் பொருள்கள் என அனைத்தும் கூடிவரவேண்டும்.

அதையும் தாண்டி, சிறந்த பிரியாணிக்கு அறிவியல் தேவை என்கிறார் Masala Lab: The Science of Indian Cooking என்ற புத்தகத்தின் எழுத்தாளர் கிரிஷ் அஷோக் (Krish Ashok).

சமையலுக்குத் தேவையான ஒவ்வொரு பொருளின் வாசனை, சுவை ஆகியவை புரிந்தாலே அவற்றின் முழு ஆற்றலை வெளிக்கொணர முடியும் என அவர் BBC செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

அது அறிவியல் நெறிசார்ந்தது, சமையல் குறிப்பு அல்ல என்றார் அவர்.

அதற்கேற்ப அவரது புத்தகத்திலும், சமையல் பொருள்களின் அளவீட்டு முறை எதுவும் கிடையாது.

இவ்வளவு விளக்கமளிக்கும் அவர், சமையற்காரரும் அல்ல, உணவு பற்றிய எழுத்தாளரும் அல்ல.

தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் அவர், தம்மைப் போல் அறிவியலில் ஆர்வமுடையவர்களுக்காகப் புத்தகத்தை எழுதியதாக BBCயிடம் தெரிவித்தார்.

சமையல் செய்யும் வல்லுநர்களின் கைகளில் மந்திரம் ஏதுமில்லை.

உணவு குறித்த ஆழ்ந்த அறிவு, சோதனை, கவனம், முக்கியமாகப் பொறுமைதான் அவர்களின் திறனுக்குக் காரணம் என்று திரு. அஷோக் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்