Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வீடெங்கும் செல்லப்பிராணியின் ரோமம் - தீர்வு என்ன?

செல்லப்பிராணி வளர்க்கும் பலர் அந்தப் பிராணிகளின் ரோமம் வீடு முழுவதும் கிடப்பது பற்றி அடிக்கடி புலம்புவதுண்டு.

வாசிப்புநேரம் -

செல்லப்பிராணி வளர்க்கும் பலர் அந்தப் பிராணிகளின் ரோமம் வீடு முழுவதும் கிடப்பது பற்றி அடிக்கடி புலம்புவதுண்டு.

என்னதான் செல்லப்பிராணி மீது அன்பு இருந்தாலும் அவற்றின் ரோமம் வீடு முழுவதும் கிடப்பதைக் கண்டால் சில சமயம் எரிச்சல் ஏற்படத்தான் செய்யும்.

இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது?

1. செல்லப்பிராணியின் ரோமத்தைச் சீப்பைக் கொண்டு வாருவது

ஒரு பெரிய தாள் அல்லது தொட்டியில் செல்லப்பிராணியை நிற்க வைத்து அதன் ரோமத்தைச் சீப்பால் வாரிவிடுங்கள். ஒரேயிடத்தில் காலுக்கடியில் விழும் ரோமங்களை எளிதில் அப்புறப்படுத்திவிடலாம்.

2. நோய், உன்னி தொல்லை போன்றவற்றால் செல்லப்பிராணி பாதிக்கப்பட்டிருக்குதா என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்

செல்லப்பிராணியின் ரோமம் வழக்கத்தைவிட அதிகமாக விழுகிறதா?

நோய், உன்னி தொல்லை போன்றவற்றால் அது பாதிக்கப்படிருக்கக்கூடும்.

விலங்கு நல மருத்துவரை அணுகுவது நல்லது.

3. செல்லப்பிராணியின் உணவுமுறையில் கவனம் செலுத்துவது

உடலில் அதிக எண்ணெய், பொடுகுப் பிரச்சினை இருந்தால் ரோமம் அதிகம் விழும்.

ஆனால் தோல் சார்ந்த பிரச்சினைகளால் மட்டும் இந்நிலை ஏற்படுவதில்லை.

தேவையான அளவு ஊட்டச்சத்து இல்லாத செல்லப்பிராணிகளின் ரோமமும் எளிதில் விழக்கூடும்.

அதே சமயம் உணவு ஒவ்வாமையாலும் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

இதனால் செல்லப்பிராணியின் ரோமம் அதிகம் விழுந்தால் அதன் உணவுமுறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

4. எளிதில் கழுவப்படக்கூடிய பாய்கள், கம்பளங்களைப் பயன்படுத்துவது

வீடெங்கும் செல்லப்பிராணியின் ரோமம்.

அதுவும் அது விலையுயர்ந்த கம்பளங்களில் விழுந்து கிடக்கிறது.

சலவை இயந்திரத்தில் கம்பளத்தைப் போட்டு எளிதில் சுத்தப்படுத்த முடியாது.

இந்நிலையைத் தவிர்க்க எளிதில் கழுவப்படக்கூடிய பாய்கள், கம்பளங்களைப் பயன்படுத்தலாம்.

5. செல்லப்பிராணிக்குச் சட்டை அணிவிக்கலாம்

பலர் விளையாட்டாக செல்லப்பிராணிக்குச் சட்டை அணிவிப்பார்கள்.

ஆனால் அதில் நன்மையும் இருக்கிறது.

செல்லப்பிராணிக்குச் சட்டை அணிவித்தால் அதன் ரோமம் அனைத்தும் அந்தச் சட்டைக்குள்ளேயே தேங்கிவிடும்.

சட்டையைக் கழற்றும்போது அந்த ரோமத்தை ஒரு தொட்டியிலோ தாளிலோ தட்டிவிட்டிடலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்