Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கைபேசியை அதிக நாள்கள் பயன்படுத்த விருப்பமா?

கைபேசிப் பயனீட்டாளர்கள் புதிய கைபேசி வாங்கும்போது, தங்களுடைய பழைய கைபேசிகளை கடைகளிடம் கொடுக்கும்போது, அந்தக் கைபேசிகள் பொதுவாக சுமார் 3 ஆண்டு காலத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

வாசிப்புநேரம் -

கைபேசிப் பயனீட்டாளர்கள் புதிய கைபேசி வாங்கும்போது, தங்களுடைய பழைய கைபேசிகளை கடைகளிடம் கொடுக்கும்போது, அந்தக் கைபேசிகள் பொதுவாக சுமார் 3 ஆண்டு காலத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அண்மையில் HYLA Mobile எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தத் தகவல் தெரியவந்தது.

கைபேசிகளின் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவது, அதற்கான முக்கியக் காரணம். குறிப்பாக iPhone-கள் !

சின்னச் சின்னப் பிரச்சினைக்கெல்லாம் இப்போது கைபேசிகளை மாற்ற நினைத்தால், பெருஞ்செலவு பிடிக்கும்.

ஆகவே, கோளாறுகளைச் சரிசெய்து தொடர்ந்து பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.

சரி, கைபேசியைப் பயன்படுத்தும் காலத்தை எப்படி நீட்டிப்பது?

இதோ இப்படி...

1. கைபேசியின் திரையை நாமே சொந்தமாக மாற்றுவது

கைபேசியைக் கைதவறிக் கீழே போட்டாலே, அதன் திரையில் விரிசல்கள் ஏற்படலாம் அல்லது அது முற்றிலும் உடைந்துவிடலாம்.

கைபேசியின் திரையை நாமே சுயமாக மாற்ற, இணையத்தில் அதற்குத் தேவைப்படும் பொருள்கள் விற்கப்படுகின்றன.

2. கைபேசிக்கு மின்னூட்டம் செய்யும் வடத்தை அவ்வப்போது சுத்தம் செய்யவேண்டும்

கைபேசிக்கு மின்னூட்டம் செய்யும் வடத்தைச் சுத்தம் செய்யும் பழக்கம், அதில் கோளாறு ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்கும்.

3. மின்கலனை மாற்றுவது

கைபேசிகளுக்கு தொடர்ந்து மின்னூட்டம் செய்யும்போது, 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு, நம் கைபேசி மெதுவாகச் செயல்பட தொடங்கிவிடும்.

மின்கலத்தை அப்போது மாற்றினால், கைபேசி பயன்படுத்தக்கூடிய காலத்தை நீட்டிக்கலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்