Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சன்னலோரமாக அமர்ந்திருக்கும் பெண்ணைச் சித்திரிக்கும் ஓவியம்... விலை 103.4 மில்லியன் டாலர்!

பிரபல ஓவியர் பாப்லோ பிக்காசோ (Picasso) உருவாக்கிய "Woman sitting by a window (Marie-Therese)" என்னும் ஓவியம் 103.4 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விலைபோயிருக்கிறது.  

வாசிப்புநேரம் -
சன்னலோரமாக அமர்ந்திருக்கும் பெண்ணைச் சித்திரிக்கும் ஓவியம்... விலை 103.4 மில்லியன் டாலர்!

படம்: Reuters

பிரபல ஓவியர் பாப்லோ பிக்காசோ (Picasso) உருவாக்கிய "Woman sitting by a window (Marie-Therese)" என்னும் ஓவியம் 103.4 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விலைபோயிருக்கிறது.

19 நிமிடத்தில், அதற்கான ஏலம் நடந்து முடிந்தது.

பிக்காசோ 1881இல் பிறந்து 1973இல் மறைந்த ஓவியர்.

1932ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட அந்த ஓவியம், பெண் ஒருவர் சன்னலோரமாக அமர்ந்திருப்பதைச் சித்திரிக்கிறது.

அதன் ஆரம்பக் கட்ட விலை, 90 மில்லியன் டாலர். ஆனால், பலவிதமான கட்டணம், தரகுக் கட்டணம் ஆகியவற்றுக்குப் பிறகு அதன் விலை 103.4 மில்லியன் டாலராக உயர்ந்தது என, ஏல நிறுவனமான Christie's குறிப்பிட்டது.

கிருமித்தொற்றுச் சூழலிலும் கலைப் பொருள் சந்தை தொடர்ந்து வளர்ச்சி கண்டுவருவதை, இந்த ஏல விற்பனை உணர்த்துவதாகக் கூறப்பட்டது.

8 ஆண்டுகளுக்கு முன், இதே ஓவியம் 44.8 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.

பிக்காசோவின் படைப்புகளில் இதுவரை 5 ஓவியங்கள், 100 மில்லியன் டாலரைத் தாண்டி விற்பனை ஆகியுள்ளன.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்