Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

20 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள பிக்காசோ ஓவியத்தைப் பூட்டால் குத்தி சேதப்படுத்திய ஆடவருக்குச் சிறை

லண்டனில், 20 மில்லியன் பவுண்ட் (206 மில்லியன் டாலருக்கும் மேல்)  மதிப்புள்ள பிக்காசோ (Picasso) ஓவியத்தைக் குத்திய ஆடவருக்கு ஒன்றரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
20 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள பிக்காசோ ஓவியத்தைப் பூட்டால் குத்தி சேதப்படுத்திய ஆடவருக்குச் சிறை

(படம்: ALAMY/AFP)

லண்டனில், 20 மில்லியன் பவுண்ட் (206 மில்லியன் டாலருக்கும் மேல்) மதிப்புள்ள பிக்காசோ (Picasso) ஓவியத்தைக் குத்திய ஆடவருக்கு ஒன்றரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி அன்று, டேட் மோடர்ன் (Tate Modern) அரும்பொருளகத்தில் நடந்தது.

அது குறித்து BBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

20 வயது ஷாக்கீல் மேஸ்ஸி (Shakeel Massey) எனும் ஆடவர், சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியத்தை, ஒரு பூட்டால் பலமுறை குத்தினார்.

அவர் பின்னர், ஓவியத்தைச், சுவரிலிருந்து பிடுங்கித் தரையில் வீசியதாகக் கூறப்பட்டது.

பலரின் கவனம் தம்மீது விழ வேண்டும் என்பதற்காக, 5 நிமிடத்தில் புகழடைய விரும்பி அவர் அவ்வாறு செய்ததாகத் தண்டனை விதித்த நீதிபதி சொன்னார்.

சீர் செய்யும் பணிகளுக்கு ஒன்றரை ஆண்டு காலம் வரை எடுக்கலாம் என்றும் 350,000 பவுண்ட் (சுமார் 460 மில்லியன் டாலர்) வரை செலவாகலாம் என்றும் நிபுணர்கள் கூறியதாய் BBC நிறுவனம் குறிப்பிட்டது.

சேதப்படுத்தப்பட்ட 'Bust of a Woman' என்று அழைக்கப்படும் பிக்காசோவின் (Picasso) புகழ்பெற்ற அந்த ஓவியம், 1944-ஆம் ஆண்டில் வரையப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்