Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முகக்கவசம் அணிவதால் முகப்பருக்கள் உருவாவதைத் தவிர்ப்பது எப்படி

முகக்கவசம் கிருமி பரவுவதைத் தடுக்க உதவுகிறது. ஆனால் அதே முகக்கவசம் சில நேரங்களில் நமக்கு முகப்பருக்களை (face acne) ஏற்படுத்துகிறது.

வாசிப்புநேரம் -
முகக்கவசம் அணிவதால் முகப்பருக்கள் உருவாவதைத் தவிர்ப்பது எப்படி

(படம்: REUTERS/Andrew Kelly)

முகக்கவசம் கிருமி பரவுவதைத் தடுக்க உதவுகிறது. ஆனால் அதே முகக்கவசம் சில நேரங்களில் நமக்கு முகப்பருக்களை (face acne) ஏற்படுத்துகிறது.

முகக்கவசத்தால் பருக்கள் உருவாவது ஏன்?

1. முகக்கவசங்கள் முகத்திற்கு ஏற்படுத்தும் எரிச்சலால் பருக்கள் உருவாகின்றன.

2. வியர்வை, அலங்காரப் பொருள்கள் ஆகியவை முகத்தில் அழுக்கைச் சேர்க்கின்றன.

3. முகக்கவசத்தின் அழுத்தம் தோலில் பட்டு அதற்கு அடிப்பகுதியில் இருக்கும் ரத்தக் குழாய்கள் சேதமடையலாம்.

முகக்கவசத்தால் பருக்கள் உருவாவதை எப்படித் தடுக்கலாம்?

முகக்கவசங்களை அணியும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய சில அம்சங்கள்...

1. முக அலங்காரப் பொருள்களைப் பயன்படுத்தி அதன் மேல் முகக்கவசம் அணிவதைத் தவிர்க்கவும்

- அலங்காரப் பொருள்கள் நம் தோலில் அழுக்கை உண்டாக்கி முகத்திலுள்ள சிறு துளைகளை அடைத்துவிடுவதால் பருக்கள் ஏற்படும்

2. முகக்கவசம் அணியும்போது அதைத் தொடவேண்டாம்

- அணியும்போதே முகத்திற்கு வசதியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால் அதைத் தொடும் தேவை ஏற்படாது

- அதை அடிக்கடி தொடும்போது தோல் எரிச்சல் அடையும், அழுக்கு முகத்தில் பதிந்துவிடும்

3. முகக்கவசம் அணியும்போது அதிகம் பேசவேண்டாம்

- பேசும்போது வெளியாகும் நீர்த்துளிகள் முகக்கவசத்தில் பதிந்து அது ஈரமாகிவிடும்

- அந்த ஈரத்தன்மை முகத்திற்கு எரிச்சலூட்டும்

4. முகக்கவசம் அணியும் முன், முகத்தைக் கழுவவும்

- சுத்தமான முகத்தில் களிம்பு (cream)பூசி அதைப் பாதுகாக்கவும்

- முகக்கவசத்தால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க அது உதவும்... பருக்கள் உருவாவதையும் தடுக்கலாம்

5. சுத்தமான முகக்கவசத்தைப் பயன்படுத்தவும்

- மறுபடியும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசத்தை உபயோகித்த பிறகு அதைக் கழுவிக் காயவைக்கவேண்டும்

- அழுக்கான முகக்கவசத்தை அணிவதால் முகத் தோலில் அழுக்குப் பதிந்து எரிச்சலூட்டி, பருக்கள் உண்டாக வழிவிடும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்