Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விமானத்தில் நெருக்கடி நேரத்தின்போது பாதுகாப்பாக இருக்க சில குறிப்புகள்

அண்மையில் விமானங்கள் அவசரமாகத் தரையிறங்கிய சில சம்பவங்களால் பலர் பதற்றமடைந்திருக்கக்கூடும். 

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: சுமார் 1 நிமிடம்)

அண்மையில் விமானங்கள் அவசரமாகத் தரையிறங்கிய சில சம்பவங்களால் பலர் பதற்றமடைந்திருக்கக்கூடும்.

இப்படிப்பட்ட நெருக்கடியான நேரங்களில் நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

1) பாதுகாப்பான ஆடைகளை அணியுங்கள்.
எளிதில் தீப்பிடித்துக்கொள்ளும் மூலப்பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஆடைகளைத் தவிர்க்கவும். கைகளையும் கால்களையும் மூடும்படியான ஆடைகளை அணிவது நல்லது.

2) சுலபமாக நடக்க உதவும் காலணிகளை அணியுங்கள், நெருக்கடியில் ஓட இது உதவும் என்கிறார் அமெரிக்க விமான சிப்பந்திகள் சங்கத்தின் தலைவர் சாரா நெல்சன்.

3) நேரடி விமானச் சேவைகளில் பயணம் மேற்கொள்ளுங்கள். ஓர் இடத்திற்கு நேரடியாக செல்வதால் வெவ்வேறு விமானங்களில் ஏறி இறங்கும் வேலை குறைகிறது. இதனால் ஏற்படும் அபாயமும் குறைகிறது.

4) விமானத்தின் பின்னால், நடைபாதைக்கு அருகிலுள்ள இருக்கையில் அமர்வதால் ஒருவர் மரணமடையும் சாத்தியம் 7% குறைவதாக 2015இல் நடத்தப்பட்ட டைம் சஞ்சிகையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

5) வெளியேறும் வழிகளை நினைவில்வைத்துக் கொள்ளுங்கள்.

6) பாதுகாப்புக் குறிப்புகளை மறந்துவிடாதீர்கள். வழிகாட்டிக் குறிப்புக் கையேட்டை படித்துவைத்துக்க்கொள்ளுங்கள் என்று நினைவூட்டுகிறார் குமார் நெல்சன்.

7) இருக்கை வாரை மாட்டிக்கொள்ளவும், கழற்றவும் தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம். நருக்க

8) மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். நெருக்கடு நேரத்தில் சாதனைங்கள் இடையூறாக இருக்கலாம்

9) நெருக்கடி நேரத்தில் வெளியேற வேண்டிய நிலைமை நேர்ந்தால் பைகளை எடுக்க முயற்சி செய்ய வேண்டாம். விரைவாக வெளியேறுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

இப்படிப்பட்ட சிறுசிறு குறிப்புகள் வருங்காலத்தில் உங்கள் விமானப் பயணத்தின்போது கைகொடுக்கலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்