Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வாழ்க்கை இனிதாய் அமைய பெரியவர்களே விளையாடுங்கள்!

"ஓடி விளையாடு, பாப்பா" என்று சொன்னார் பாரதியார், அன்று. வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற, பெரியவர்களும் விளையாடவேண்டும் என்று கூறப்படுகிறது, இன்று.

வாசிப்புநேரம் -

"ஓடி விளையாடு, பாப்பா" என்று சொன்னார் பாரதியார், அன்று.


வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற, பெரியவர்களும் விளையாடவேண்டும் என்று கூறப்படுகிறது, இன்று.



விளையாட்டில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?


அது குறித்து New York Times செய்தி நிறுவனத்துடன் பகிர்ந்துகொண்டார் ஜெஃப் ஹேரி (Jeff Harry) எனும் தன்முனைப்புப் பயிற்றுவிப்பாளர்.


பெரியவர்களைப் பொறுத்தவரை, விளையாட்டு என்றால் என்ன?



  • பெரியவர்களுக்கு விளையாட்டு என்பது அவர்கள் மகிழ்ச்சியுடன் செய்யும் செயலைக் குறிக்கிறது. 
  • எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்றைச் செய்வது தான் விளையாட்டாக வகைப்படுத்தப்படுமாம்.


விளையாட்டால் பெரியவர்கள் அடையும் நன்மை?



  • விளையாட்டு, ஒருவரைச் சங்கடமிக்க காலத்திலும் ஊக்குவிக்கும்.
  • பொறுப்புகளில் மூழ்கிவிடாமல் இருக்க உதவும்.
  • மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கைகொடுக்கும்.


பெரியவர்கள் எவ்வாறு விளையாடலாம்?



  • நமக்குள் அடங்கியுள்ள குழந்தை குணத்தை ஆராயவேண்டும்.
  • பிள்ளைப் பருவ நினைவுகளை அசைபோட்டு அதைக் கண்டறியலாம்.
  • அன்று நாம் செய்ததில் எது நமக்கு மகிழ்ச்சி அளித்தது? இன்று அதே மகிழ்ச்சியை எந்த நடவடிக்கை அளிக்கிறதோ, அதைச் செய்வது விளையாடுவதற்குச் சமம்.
  • உங்கள் மகிழ்ச்சியான பொழுதை இணையத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
  • நாம், நமக்காக விளையாடவேண்டும்; மகிழ்ச்சியுற வேண்டும். மற்றவர்கள் பார்க்கவோ, ரசிக்கவோ அவ்வாறு செய்வது உண்மையான மகிழ்ச்சியும் அல்ல, விளையாட்டும் அல்ல.
  • விளையாட்டுக்கு எனக் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கவேண்டும்


விளையாட்டு வேறுபடும்....



சிலருக்கு மற்றவர்களுடன் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளப் பிடிக்கும்; சிலருக்கு சிந்தனைத் திறனைத் தூண்டும் விளையாட்டுகள் பிடிக்கும்; சிலருக்குப், பூச்சிகளை ரசிப்பது போன்ற அசாதாரண நடவடிக்கைகளில் ஈடுபடப் பிடிக்கும்.

இவ்வாறு, ஒருவர், தமக்கு என்ன பிடிக்கும் என்பதைக் கண்டுபிடித்து, அதில் ஈடுபடுவதன் மூலம் விளையாட ஆரம்பிக்கிறார் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆகவே, வாழ்க்கை இனிதாய் அமைய, சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் விளையாடவேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


வாரயிறுதி ....நீங்கள் விளையாடத் தயாரா?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்