Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இளநரை...திரும்பக் கிடைக்குமா கறுகறு முடி?

இளம் வயதிலேயே தோன்றும் நரைமுடி குறித்துப் பலரும் கவலைப்படுவது உண்டு.

வாசிப்புநேரம் -
இளநரை...திரும்பக் கிடைக்குமா கறுகறு முடி?

(படம்: Pixabay)

இளம் வயதிலேயே தோன்றும் நரைமுடி குறித்துப் பலரும் கவலைப்படுவது உண்டு.

ஒட்டுமொத்த உடல் நலத்தின் அடையாளமாகக்கூட ஒருவரின் தலைமுடி நிறம் கருதப்படுவதுண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

இளநரை, உடலில் உள்ள மற்ற பல கோளாறுகளின் அடையாளமாகக்கூட இருக்கலாம்.

தலைமுடி நரைப்பதற்கு சுமார் 30 விழுக்காடு, நமது மரபணுக்கள்தான் காரணம்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, மன அழுத்தம், மருத்துவப் பிரச்சினைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு, ரசாயனங்கள் அதிகம் உள்ள பொருள்களின் பயன்பாடு ஆகியவை மீதம் உள்ள 70 விழுக்காட்டுக் காரணத்தில் அடங்கும்.

ஆனால், நரைத்துப்போன முடியைச் சாயம் எதையும் பயன்படுத்தாமல் அதன் இயற்கையான நிறத்திற்கு மீண்டும் மாற்றமுடியுமா?

முடியும் என்கிறார்கள் சில நிபுணர்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தல், மன அழுத்தத்தைக் குறைத்தல்- ஆகியவற்றின் மூலம் நரைத்துப்போன தலைமுடியின் இயற்கையான நிறம் திரும்ப வாய்ப்புகள் உண்டு.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம், ஸிங்க் (zinc) எனப்படும் துத்தநாகச் சத்து அதிகமுள்ள மீன், கீரை வகைகள், புரொக்கோலி (broccoli) ஆகிய உணவு வகைகள் இளநரை மாற உதவக்கூடும்.

இருப்பினும், நரைத்த முடியின் நிறத்தைப் பழைய நிலைக்குத் திரும்பச் செய்வதைவிட இளநரை வரவிடாமல் தவிர்ப்பதில் வெற்றி காணும் சாத்தியம் அதிகம் உண்டு.

1) ஆரோக்கியமான உணவு

Antioxidants எனப்படும் முதுமைக்கு எதிரான சத்து,
உயிர்ச்சத்து B-12, உயிர்ச்சத்து D ஆகியவை அதிகம் உள்ள உணவை உட்கொள்ளுதல் இளநரையைத் தடுக்க உதவும்.

(படம்:Pixabay)

2) உடற்பயிற்சி

அடிக்கடி உடற்பயிற்சி செய்வது இரத்த ஓட்டத்தைச் சீர் செய்து ஆரோக்கியமாக இருக்க உதவும்.

3) போதுமான ஓய்வு

போதுமான அளவு ஓய்வு எடுப்பது ஆரோக்கியமான தலைமுடிக்கு முக்கியம்.

4) ரசாயனக் கலப்பற்ற பொருள்கள்

Sodium lauryl sulfate (SLS), Sodium laureth sulfate (SLES) ஆகிய ரசாயனங்கள் இல்லாத தலைமுடிப் பொருள்களைப் பயன்படுத்துவது நல்லது.

படம்: AFP

5) புகைபிடித்தல்

புகைப்பிடிப்பது தலைமுடியை விரைந்து நரைக்கச்செய்யும் என்று கூறப்படுகிறது. ஆகவே, புகை பிடிப்பதைத் தவிர்ப்பது பல வகையிலும் நல்லது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்