Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Pro-bono சட்டச் சேவைகள்...யார் யார் பெறலாம்? சமூகத்தில் அது குறித்த விழிப்புணர்வு உண்டா?

வசதி குறைந்தவர்களுக்கும் உரிய சட்ட உரிமை கிடைப்பதற்கு வழியமைக்கிறது Pro-bono  சட்டச் சேவை.

வாசிப்புநேரம் -

வசதி குறைந்தவர்களுக்கும் உரிய சட்ட உரிமை கிடைப்பதற்கு வழியமைக்கிறது Pro-bono சட்டச் சேவை.

இந்தோனேசியப் பணிப்பெண் பார்டி லியானி (Parti Liyani) தம் முதலாளி வீட்டில் திருடிய குற்றச்சாட்டுகளிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டார். Pro-bono வழக்குரைஞர்களின் உதவியால் அது சாத்தியமானது.

எத்தகைய சூழலில் Pro-bono சட்டச் சேவையை நாடலாம், அத்தகைய உதவியைப்பெற ஏதேனும் நிபந்தனைகள் உண்டா என்பது பற்றி Lincoln's Law LLC
சட்ட அலுவலக வழக்குரைஞர் க. சத்திநாதன் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டார்.

Pro-bono என்றால் என்ன?

சட்டச் சேவை தேவைப்படுவோருக்கும் வழக்குரைஞர் வைத்துக்கொள்ளப் போதிய வசதி இல்லாதவர்களுக்கும் உதவும் நோக்கில் வழக்குரைஞர்கள் சிலர் தொண்டூழிய அடிப்படையில் உதவ முன்வருவது Pro-bono.

யார் தகுதி பெறுகிறார் என்பது எப்படித் தெரியும்?

கோப்புப் படம்: TODAY

சிங்கப்பூரில் Pro-bono சட்டச் சேவையைப் பெற சில நிபந்தனைகள் உண்டு. மரண தண்டனையை எதிர்நோக்கும் கைதிகள் அல்லது வசதி குறைந்தவர்களுக்கு Criminal Legal Aid திட்டத்தின் வழியாக அரசாங்கம் சட்டச் சேவை வழங்கும். அதன்படி, சில நிபந்தனைகளின் அடிப்படையில், தேவையுடையோருக்கு வழக்குரைஞர்களின் உதவிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கத்தின் Pro-bono சேவைகளைப் பெற விரும்புவோருக்கு அத்தகைய குறிப்பிட்ட நிபந்தனை ஏதும் இல்லை.

எந்தெந்த சட்டப் பிரச்சினைகளுக்கு வசதி குறைந்தவர்கள் Pro-bono சேவைகளை நாடலாம்?

1985இல் அறிமுகம் செய்யப்பட்ட சட்டச் சங்கத்தின் Criminal Legal Aid திட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு Pro-bono சேவைகளை நாடலாம். அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் சிங்கப்பூரில் அந்தச் சேவையைப் பெறலாம். மாதர் சாசானம், குற்றவியல் சட்டம், போதைப் புழக்கம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் அத்தகைய சேவையை நாடலாம்.

மரண தண்டனை எதிர்நோக்குவோருக்கு உச்சநீதிமன்ற சட்ட ஆதரவுத் திட்டத்தின் மூலம் சட்டச் சேவைகள் வழங்கப்படும்.

மற்ற சட்ட சேவைகள் தேவைப்படுவோர் சமூக ரீதியாக உதவி நாடலாமா?

சமூக மன்றங்களிளும், சமூக மேம்பாட்டு நிலையங்களிலும் சட்ட ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

பின்வரும் மற்ற சமூக அமைப்புகளின் மூலமாகவும் பொதுமக்கள் சட்டச் சேவைகளை நாடலாம்....

  • AWARE,
  • Catholic Lawyers Guild,
  • ஜாமியா (Jamiyah),
  • சிங்கப்பூர் மகளிர் வழக்குரைஞர் சங்கம் (Singapore Association of Women Lawyers)
  • சிறப்புத் தேவைகள் அறநிறுவனம் (Special Needs Trust Company),
  • Legal Aid Bureau,
  • Singapore Council of Women’s Organisation,
  • HOME

சட்டச் சேவைகளை எப்படி நாடுவது என்று சமூகத்தில் விழிப்புணர்வு உள்ளதா?

Pro-bono சேவைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முக்கியத் தளம் தற்போது சிங்கப்பூரில் இல்லை. வெவ்வேறு pro-bono சேவைகள் இருப்பதால் அவற்றைப்பெற சில நிபந்தனைகள் உண்டு. அவை பற்றிய தகவலும் சாதாரண மக்களிடம் எளிதில் சென்று சேர்வதில்லை. ஊடகங்களிலும் அவை பெரிய அளவில் விவரிக்கப்படுவதில்லை.

குறிப்பாக, குறைந்த வருமானம் ஈட்டும் சிலருக்குச் சட்டச் சேவைகள் முக்கியமாகத் தேவைப்படலாம். அதனால், வசதி குறைந்தவர்களுக்கு இத்தகைய சேவைகளைப் பற்றிய தகவல்கள் சென்றடைய வேண்டும்.


  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்