Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இலவச wifi பயன்படுத்துபவரா? கவனமாக இருங்கள்!

எந்நேரமும் இணையத்துடன் இணைந்திருக்கவேண்டிய காலம் இது.

வாசிப்புநேரம் -

எந்நேரமும் இணையத்துடன் இணைந்திருக்கவேண்டிய காலம் இது.

4G கட்டமைப்பு வழியாக நமது கைபேசிகளில் இணையத்தை நாடினால், அதன் சேவை கட்டணங்கள் அளவிற்கு மீறி சென்றுவிடும்.

அந்தச் சூழ்நிலையைத் தவிர்க்க, நம்மில் பலர் பொது இடங்களில் இருக்கக்கூடிய கம்பியில்லா இணையத் தொடர்பைப் (wifi) பயன்படுத்துவதுண்டு.

ஆனால், அதில் சில ஆபத்துகள் உள்ளன. கவனமாக இல்லையென்றால், நமது தகவல் ஊடுருவப்படலாம்.

பொது இடங்களில் இருக்ககூடிய கம்பியில்லா இணையத் தொடர்பைப் (wifi) பயன்படுத்தும்போது, எவற்றை நினைவில் கொள்ள வேண்டும்?

1. இணையக் கட்டமைப்பு பாதுகாப்பானதா என்பதை அறியவேண்டும்

- எல்லா இடங்களிலும் பாதுகாப்பான இலவச இணைய வசதிகள் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. எனவே விழிப்புடன் செயல்பட்டால் விபரீதங்களைத் தவிர்க்கலாம்.
-குறிப்பிட்ட சில இடங்களில் கம்பியில்லா இணையத் தொடர்பைப் பயன்படுத்துவதற்கு மறைச்சொல் அவசியம்.
-மறைச்சொல் அவசியமில்லை என்றால், அதைப் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.

2. பணப் பரிவர்த்தனைகளைச் செய்யக்கூடாது
- பணப் பரிவர்த்தனைகளைச் செய்தால், வங்கிக் கணக்கின் முகவரிகள் ஊடுருவப்படலாம்.
- மின்னஞ்சல் கணக்கையும் பயன்படுத்தக்கூடாது.

3. இணையப்பக்கங்கள் பாதுகாப்பானதா என்பதை அறியவேண்டும்
- இணைப்பக்க முகவரிகள் பொதுவாக 'http://' என்று கொண்டிருக்கும். அவைப் பாதுகாப்பாற்ற இணையப்பக்கங்கள். அத்தகைய இணையப்பக்கங்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.
- பாதுகாப்பான இணையப்பக்கங்கள் என்றால் அவற்றின் முகவரியில் 'https://' என்று கொண்டிருக்கும்.

4. தனிப்பட்ட தகவல்கள் தேவைப்படும் இணையப்பக்கங்களைப் பயன்படுத்தக்கூடாது

- இணையத்தைப் பயன்படுத்தும்போது, அத்தகைய பக்கங்களைத் தவிர்க்கலாம்.
- தனிப்பட்ட தகவல்கள் தேவைப்படும் கணக்குகளிலிருந்தும் வெளியாகவேண்டும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்