Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

20 மணிநேர விமானப் பயணத்தில் மெய்நிகர் தொழில்நுட்பம், உடற்பயிற்சி சைக்கிள்கள் கேட்கும் பயணிகள்

சிங்கப்பூர்: மெய்நிகர் தொழில்நுட்பம், உடற்பயிற்சி சைக்கிள்கள்...20 மணிநேர விமானப் பயணத்தின் போது இவையெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர் குவாண்ட்டாஸ் விமான நிறுவனத்தின் பயணிகள்.

வாசிப்புநேரம் -
20 மணிநேர விமானப் பயணத்தில் மெய்நிகர் தொழில்நுட்பம், உடற்பயிற்சி சைக்கிள்கள் கேட்கும் பயணிகள்

(படம்: James Morgan)

சிங்கப்பூர்: மெய்நிகர் தொழில்நுட்பம், உடற்பயிற்சி சைக்கிள்கள்...20 மணிநேர விமானப் பயணத்தின் போது இவையெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர் குவாண்ட்டாஸ் விமான நிறுவனத்தின் பயணிகள்.

சிட்னியிலிருந்து லண்டனுக்கு இடைநில்லா விமானச் சேவையை அறிமுகம் செய்யும் பணியில் உள்ளது குவாண்ட்டாஸ். 2022இல் தொடங்கவிருக்கும் சேவையில் சுகாதார, உடற்பயிற்சி அம்சங்கள் சேர்க்கப்படுவதை மக்கள் விரும்புவதாக நிறுவனம் கண்டறிந்துள்ளது.

விமானத்தினுள் உணவகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சிலர் கருத்துரைத்துள்ளனர்.

பயணிகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வது ஒரு உற்சாகமான சவாலாக இருக்கும் என்று நிறுவனம் கூறியது.

தற்போது பெர்த் - லண்டன் விமானச் சேவையின் பயணிகளுக்கு பயணத்துக்கு முன்பும் அதன் பிறகும் பெர்த்தில் எளிமையான உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன, அதற்கான வரவேற்பும் நன்றாக உள்ளது.

குவாண்டாஸுக்குப் போட்டி கொடுக்கும் வகையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் சிங்கப்பூர்-நியூயார்க் விமானச் சேவையில் ஆரோக்கியமான உணவுகளையும் உடற்பயிற்சி வகுப்புகளையும் வழங்குகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்