Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியல்... சில விவரங்கள்..

QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில், சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்களின் சில பாடத்திட்டங்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

வாசிப்புநேரம் -

QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியல் என்றால் என்ன? அதன் சிறப்பு என்ன?

உயர் கல்வியில் நிபுணத்துவம் பெற்ற Quacquarelli Symonds (QS) என்ற பிரிட்டன் நிறுவனம், 2004-ஆம் ஆண்டில், தரவரிசைப் பட்டியலைத் தொடங்கியது.

ஆண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படும் இந்தப் பட்டியல், உலகின் ஆகச் சிறந்த பல்கலைக்கழகங்களையும் 48 பாடங்களுக்கான சிறந்த பல்கலைக்கழகங்களையும் வரிசைப்படுத்தும்.

அது உலகளவில் ஆக அதிகமாக வாசிக்கப்பட்ட பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியல்.

வேறு என்னென்ன வரிசைப்படுத்தப்படுகின்றன?

- உலக வட்டாரங்களின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களின் தரவரிசை
- நாட்டின் அடிப்படையில்,பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள்
-மாணவர்களுக்கு ஏற்ற நகரங்கள்

ஆகியவை வரிசைப்படுத்தப்படுகின்றன.

பல்கலைக்கழகங்கள் எந்த அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகின்றன?

கல்வி
- கல்வி அடிப்படையிலான செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது
- பல்கலைக்கழகத்தின் படைப்புகள் எந்த அளவிற்கு மற்ற படைப்புகளில் குறிப்பிடப்படுகின்றன.
-டாக்டர் பட்டம் பெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை

முதலாளிகளின் மதிப்பீடு
- முதலாளிகளின் கண்ணோட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்தின் செல்வாக்கு
- பட்டம் பெற்று 12 மாதங்களில், வேலையில் அமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை
- முதலாளிகள் பல்கலைக்கழகத்துடன் எந்த அளவிற்கு இணைந்து செயல்படுகின்றனர்.

மாணவர்கள் குறித்த மதிப்பீடு

- ஆசிரியர்களுடன் ஒப்பிடுகையில் மாணவர்களின் எண்ணிக்கை
- வெளிநாடுகளுடனான பரிமாற்ற நடவடிக்கைகள்

அனைத்துலக ஆசிரியர்கள் மதிப்பீடு

- வெளிநாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை
-வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை

போன்றவற்றைக் கொண்டு, பல்கலைக்கழகங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்