Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தொடர் மழையால் துணிகளைக் காயவைப்பதில் சிரமமா?...அதைக் கையாள சில குறிப்புகள்

மழை பெய்தாலே துணிகளைக் காயவைப்பது பெரிய சிரமமாகிவிடுகிறது. சிலர், துணிகளை வெளியில் காயவைக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். 

வாசிப்புநேரம் -

மழை பெய்தாலே துணிகளைக் காயவைப்பது பெரிய சிரமமாகிவிடுகிறது.

சிலர், துணிகளை வெளியில் காயவைக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

வீட்டிற்குள் நிழலில் உலர்த்தப்படும் துணிகளோ எளிதில் காய்வதில்லை. சில சமயங்களில் அவற்றில் வாடையும் வரலாம்.

மழைக்காலத்தில், துணிகளைச் சற்று எளிதாகக் காயவைக்க சில வழிகள்.

1) சலவை இயந்திரம் சுத்தமாக இருக்கவேண்டும்.

சலவை இயந்திரத்தில் பூஞ்சனம், அழுக்கு, நுண்ணுயிர்கள் இருந்தால் துணிகள் காயும்போது அவற்றிலிருந்து துர்நாற்றம் எழலாம்.

அதனால், சலவை இயந்திரத்தின் ஓரங்களில் பொருத்தப்பட்டுள்ள நூல் பிசிறுகளைச் சேகரிக்கும் சிறு பையை அவ்வப்போது வெளியே எடுத்து அவற்றைக் கொட்டிச் சுத்தப்படுத்தவேண்டும்.

மேலும் அவ்வப்போது தண்ணீருடன் காடி (vinegar), baking soda இரண்டையும் பயன்படுத்தி துணிகள் இன்றி ஒருமுறை இயந்திரத்தை இயக்கலாம்.

இதன்மூலம், சலவை இயந்திரம் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்கிறது.

பின்னர் சலவை இயந்திரத்தின் கதவைத் திறந்துவிட்டு அதைக் காய வைக்க வேண்டும்.

இதனால், துணிகளில் இருந்து துர்நாற்றம் உருவாவதை ஓரளவு தவிர்க்கலாம்.

2) எதை எப்போது துவைக்க வேண்டும் என்று முன்னுரிமை தரலாம்.

அனைத்துத் துணிகளையும் சலவை செய்து அவற்றைக் காயவைக்க இடமின்றி தவிப்பதற்கு பதிலாக சீருடை போன்ற அவசியம் தேவைப்படும் துணிகளை முதலில் துவைக்கலாம்.

அதிக வியர்வையோ அழுக்கோ இல்லாதபட்சத்தில், ஒரு துணியை இரண்டு, மூன்று தடவை அணியமுடியுமா என்று யோசித்து முடிவெடுக்கலாம்.

ஜீன்ஸ், கம்பளி போன்ற அடர்த்தியான துணிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மெல்லிய துணிகளைப் பயன்படுத்தலாம். அவை, சீக்கிரமாகக் காயும் தன்மை கொண்டவை.

3) துணிகளை ஊறவைத்தல்

துணிகளை அப்படியே இயந்திரத்தில் போட்டுத் துவைக்காமல், அதிகபட்சமாக அவற்றை 30 நிமிடத்திற்குத் தண்ணீரில் ஊறவைத்தால் அவற்றில் படிந்துள்ள அழுக்கு சுலபமாக நீங்கும்.

4) துணியிலிருந்து வாடை வருவதைத் தவிர்க்க...

வீட்டினுள் காயும் துணிகள் சரியாக உலராததால் அவற்றில் ஒரு வகை துர்நாற்றம் உருவாகும். துணிகளில் ஈரத்தன்மை எஞ்சியிருந்து அதில் நுண்ணியிரிகள் வளருவதால், அவ்வாறு ஏற்படுகிறது.

அதைத் தவிர்க்க fabric conditioner திரவத்தைத் துவைக்கும் கடைசிச் சுற்றில் பயன்படுத்தலாம் அல்லது துணி துவைக்கும்போது காடியைக் (vinegar) கொஞ்சமாகச் சேர்க்கலாம்.

துணிகளில், நுண்ணுயிர் வளர்வதை அது தடுக்கும்.

துணிகள் காயும்போது, அவற்றுக்கு எதிராக மின்விசிறியைப் போட்டு வைக்கலாம்.

துணிகள் காயும் இடத்தில் உப்பு அல்லது செய்தித்தாள்களை வைத்தால்கூட அறையிலுள்ள ஈரத்தன்மையை அவை உறிஞ்சி எடுத்துவிடும்.

6) இஸ்திரி போடலாம்

ஒரு சில நாள்கள் காயவைத்தும் துணிகள் சற்று ஈரமாக இருப்பதை உணர்ந்தால், அவற்றுக்கு இஸ்திரிபோடலாம். ஈரம் உடனடியாகக் காய்ந்துவிடும்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்