Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புத்தாண்டு விடுமுறையில் கடுங்குளிரும் விடா மழையும் - மக்கள் கருத்து

புத்தாண்டு விடுமுறைக் காலத்தில், சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்துவருவதோடு, வழக்கத்துக்கு மாறான குளிரும் நிலவுகிறது. 

வாசிப்புநேரம் -
புத்தாண்டு விடுமுறையில் கடுங்குளிரும் விடா மழையும் - மக்கள் கருத்து

(கோப்புப் படம்: Jeremy Long)

நிருபர்: துர்கா 


புத்தாண்டு விடுமுறைக் காலத்தில், சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்துவருவதோடு, வழக்கத்துக்கு மாறான குளிரும் நிலவுகிறது.

அட்மிரல்ட்டி, புக்கிட் தீமா உள்ளிட்ட சில பகுதிகளில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸுக்குக் குறைந்தது.

இம்மாதத்தின் முதல் 2 வாரங்களுக்கு, இடியுடன் கூடிய மழையையும் காற்றையும் எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்திருந்தது.

நேற்று, பொதுப் பயனீட்டுக் கழகம் ஐந்து இடங்களில் திடீர் வெள்ள எச்சரிக்கை விடுத்தது.

சிங்கப்பூருக்கு இது சற்று மாறுபட்ட தட்ப-வெப்பச்சூழல்.

அது குறித்து 'செய்தி' நேயர்கள் என்ன நினைக்கின்றனர்?...

REUTERS/Stringer


குளிராக இருப்பதும் நல்லதுதான். இப்படிப்பட்ட குளிர்ச்சியில் வீட்டில் தங்கிப் புத்தகம் வாசிக்கலாம், படம் பார்க்கலாம். போர்வையைப் போர்த்திக்கொண்டு இதமாக ஓய்வெடுக்கலாம்!

ஜமுனாராணி

(படம்:Calvin Oh)

இவ்வாறு விடாத மழையின் குளிர்ச்சி தரும் சுகம், பலருக்கும் இன்பமான அனுபவத்தைத் தரலாம்.

ஆனால், குளிர் காரணமாகச் சிலருக்குச் சில ஆரோக்கியப் பிரச்சினைகளும் ஏற்படலாம்.

எதுவாக இருந்தாலும், ஒன்றை மட்டும் மறக்கவேண்டாம்...

வெளியே செல்லும்போது, நினைவோடு குடையை எடுத்துச் செல்லுங்கள்...!! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்