Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மழை பெய்யும்போது ஏன் மண் வாசனை வருகிறது?

மழை பெய்தால் நாம் இரண்டு செயல்களைச் செய்யாமல் இருக்க மாட்டோம்....

வாசிப்புநேரம் -
மழை பெய்யும்போது ஏன் மண் வாசனை வருகிறது?

படம்: pixabay

மழை பெய்தால் நாம் இரண்டு செயல்களைச் செய்யாமல் இருக்க மாட்டோம்....

ஒன்று, கையை நீட்டி ஒரு துளி மழை நீரையாவது பிடிப்பது...

மற்றொன்று முழுமூச்சாக மண் வாசனையை நுகர்வது.

நாம் பலமுறை மண் வாசனையை நுகர்ந்திருப்போம், சிலமுறை அது எப்படி உருவாகிறது என்று யோசித்திருப்போம்...

அதற்கான பதில்கள் இதோ...

எல்லா வேளையிலும் மண்வாசனை ஏற்படாது... என்ன காரணம்?

மண் வாசனை ஏற்பட மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள், செடிகள், ஏன் இடி, மின்னல் கூட காரணமாக இருக்கலாம்.

நுண்ணுயிரிகள்:

வறண்ட வானிலையால் நிலம் சூடாக இருக்கும். அப்போது ஒரு வகை நுண்ணுயிரியுடன் மழை நீர் கலக்கும் போது காற்றில் மண்வாசனையை அது தூண்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் BBC செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

சத்துகள் நிறைந்த மண்ணில் தான் அந்த நுண்ணுயிரி இருக்குமாம்.

செடிகள்:

சில ஆராய்ச்சியாளர்கள் மண்வாசனைக்குச் செடிகள் தான் காரணம் என்கிறார்கள்.

சில செடிகளின் வேர்களில் வாசனைத் திரவியங்கள் இயற்கையாக உருவாகுமாம். அவை மழையுடன் கலக்கும் போது மண்வாசனை உருவாவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இடி, மின்னல்:

மழைபெய்யும் போது இடி, மின்னல் ஏற்படும். அப்போது ஓஸோன் (Ozone) படலத்தில் உள்ள வாசனைத் துகள்கள் காற்று மண்டலத்தில் கலக்குமாம். அது மண்வாசனையை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது மண்வாசனை கொண்ட வாசனைத் திரவியங்களை வாங்க மக்கள் போட்டி போட்டுவருகிறார்களாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்