Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சின்னத் திரையுலகில் கால்பதிக்கின்றாரா 'சூப்பர் ஸ்டார்'?

இந்தியத் திரையுலகப் பிரபலமான "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் விரைவில் புதிய தொலைக்காட்சி ஒளி வழியை தொடங்கப் போவதாக இந்திய ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியத் திரையுலகப் பிரபலமான "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் விரைவில் புதிய தொலைக்காட்சி ஒளி வழியை தொடங்கப் போவதாக இந்திய ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலில் களம் இறங்கப்போவதாகத் திரு. ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

தொலைக்காட்சி ஒளி வழி தொடங்குவதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

புதிய ஒளி வழிக்கு மூன்று பெயர்களைப் பதிவுசெய்ய வணிக அமைச்சிடம் கடந்த மாதம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாம்.

விண்ணப்பம் செய்தவர் ரஜினி மக்கள் மன்றக் கட்சியின் திரு. சுதாகரன்.

'ரஜினி டிவி', 'சூப்பர் ஸ்டார் டிவி', 'தலைவர் டிவி' எனத் திரு. ரஜினியுடன் தொடர்புடைய பெயர்களைப் பதிவுசெய்ய அவர் கோரியுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்