Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சமூக அளவில் நோய் எதிர்ப்புச் சக்தியை எவ்வாறு அடைவது?

கொரோனா நோய்த்தொற்றுக் காலக்கட்டம், சமூக அளவிலான நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கியத்துவத்தைக் காட்டியுள்ளது. 

வாசிப்புநேரம் -
சமூக அளவில் நோய் எதிர்ப்புச் சக்தியை எவ்வாறு அடைவது?

படம்: Reuters/NIAID-RML

கொரோனா நோய்த்தொற்றுக் காலக்கட்டம், சமூக அளவிலான நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கியத்துவத்தைக் காட்டியுள்ளது.

"Herd Immunity" என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சமூக அளவில் உண்டாகக்கூடிய நோய் எதிர்ப்புச் சக்தி, நோய்த்தொற்றுக் காலங்களில் சமூகத்தை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும்.

இயற்கையான நோய்த்தொற்று அல்லது தடுப்பூசி?

சமூகத்தில் பலரும் இயற்கையான நோய்த்தொற்றிலிருந்து குணமடையும்போது, அவர்களது உடலில் இயல்பான நோய்த்தடுப்புச் சக்தி உருவாகும்.

ஆனால் அதற்கு நீண்ட காலம் எடுக்கும்.

தடுப்பூசி, உடனடியாக அந்த நோய்க்கான எதிர்ப்புச் சக்தியை உடலுக்கு வழங்கும்.

ஆய்வாளர்களில் பலர், தடுப்பூசியைக் கொண்டு சமூக அளவில் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாக்குவதைச் சிறந்த முறையெனக் கருதுகின்றனர்.

சமநிலையான விநியோகம்

ஒரு சில தகுதிகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசியை விநியோகம் செய்யாமல், அதனை அனைவருக்கும் கிடைக்குமாறு செய்தால் சமூக அளவில் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.

முடக்கநிலை

நோய்ப்பரவல் காலக்கட்டத்தில் மக்கள் அதிகமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளாமல் இருந்தால் சமூக அளவில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
முடக்கநிலையை அறிவிப்பதற்கு இது ஒரு காரணம்.

சமூக அளவில் எதிர்ப்புச் சக்தி உருவாவதற்காகக் காத்திருக்கும் வேளையில்...

முகக்கவசங்கள் அணிவதும் பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றுவதும் கைகளைக் கழுவுவதும் முக்கியம்.

அந்த நல்ல பழக்கங்கள் நோய்த்தொற்றிலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்று மெல்பர்ன் டீக்கின் பல்கலைக்கழகத்தின் சுகாதாரத் துறைத் தலைவர் கெத்தரின் பெனெட் கூறுகிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்