Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நேரத்திற்குச் செல்ல நினைத்தாலும் முடியவில்லையா?

நண்பர்களைப் பார்க்கச் செல்லும்போது தாமதம்...வேலைக்கு அல்லது பள்ளிக்குச் செல்லும்போது தாமதம்...

வாசிப்புநேரம் -
நேரத்திற்குச் செல்ல நினைத்தாலும் முடியவில்லையா?

படம்: Pixabay

நண்பர்களைப் பார்க்கச் செல்லும்போது தாமதம்...வேலைக்கு அல்லது பள்ளிக்குச் செல்லும்போது தாமதம்...

இப்படி அனைத்து இடங்களுக்கும் நேரத்திற்குச் செல்ல நினைத்தாலும் முடியவில்லையா?

அதற்கு முக்கிய காரணம், செயல்களுக்கு எவ்வளவு நேரம் செலவிடவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது.

அடுத்த முறை தாமதமாகச் செல்லாமல் இருப்பதற்கு, இந்த வழிகளைப் பின்பற்றிப் பாருங்கள்!

1. என்னென்ன செய்யவேண்டும் என்று குறித்து வைப்பது

ஓர் இடத்திற்குச் செல்வதற்கு முன்னர், அதற்கு என்னென்ன தயார் செய்யவேண்டும் என்று குறித்து வைப்பது சிறப்பு. அதோடு, அதற்குரிய நேரம் ஒதுக்கவேண்டும்.

2. கடிகாரத்தில் நேரத்தை மாற்றி வைப்பது

கடிகாரத்தில் நேரம், 5-யிலிருந்து 10 நிமிடங்களுக்கு முன்னால் காட்டவேண்டும். உதாரணத்திற்கு, நேரம் மாலை மணி 5.10-யாக இருந்தால் கடிகாரத்தில் 5.20-ஆக காட்டவேண்டும்.

இதனால், உங்களால் வழக்கத்தைவிட 5 நிமிடங்களுக்கு முன்னால் தயார் செய்யமுடியும்.

3. நாளை செய்யவிருக்கும் செயல்களுக்கு இன்றே தயார் செய்வது

அவ்வாறு செய்தால், நீங்கள் புறப்படுவதற்கு நேரம் எடுத்தாலும், 'தேவைப்படும் பொருள்களை எடுத்துவிட்டோம்' என்ற நிம்மதி இருக்கும். அதோடு, மறந்துவிட்ட பொருள்களை எடுக்க மீண்டும் வீட்டிற்குச் செல்லத் தேவையில்லை.

4. புதிய இடத்திற்கு எப்படிச் செல்வது என்று முன்பே தெரிந்துகொள்வது

உதாரணத்திற்கு, நீங்கள் வேலையில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்லவிருக்கிறீர்கள் என்றால், நிறுவனத்திற்கு எப்படிச் செல்வது என்பதை முன்பே தெரிந்துகொள்ளுங்கள். அதோடு, பயணம் செய்வதற்குக் கூடுதல் நேரம் ஒதுக்குங்கள்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்