Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அரிசி சாப்பிட்டால் உடற்பருமன் பிரச்சினை குறையுமாம்

அரிசி உண்பதால் உடற்பருமன் பிரச்சினையைக் குறைக்கலாம் என்று ஜப்பானிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

அரிசி உண்பதால் உடற்பருமன் பிரச்சினையைக் குறைக்கலாம் என்று ஜப்பானிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஆய்வு கியோட்டோவிலுள்ள டோஷிஷா பெண்கள் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களால் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு நாளும் உண்ணும் அளவில் 50 கிராம் அரிசியைச் சேர்த்துக்கொண்டால் போதும்.

உலகில் பருமனாக உள்ளோரின் எண்ணிக்கை 650 மில்லியனிலிருந்து 643.5 மில்லியனுக்குக் குறையும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரிசியை அதிகம் உண்ணும் நாடுகளில் பருமனாக உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவு என்று ஆய்வை வழிநடத்திய பேராசிரியர் டொமோகோ இமாய் கூறினார்.

அரிசியில் கொழுப்பு குறைவாக இருப்பதோடு அதிலுள்ள நார்ச்சத்து, ஊட்டச்சத்து போன்றவை ஒருவருக்கு வயிறு நிரம்பியது போன்ற உணர்வைக் கொடுக்கிறது.

அதன் காரணமாக அரிசி உட்கொண்டால் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம் என்கிறார் அவர்.

மேற்கத்திய நாடுகள் உட்பட உலகில் உடற்பருமன் பிரச்சினை மோசமடைந்துகொண்டே வருவதால் அனைவரையும் அரிசி சாப்பிட ஊக்குவிப்பது அவசியம் என்றார் பேராசிரியர் இமாய்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்