Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வெளிநாட்டுக்குச் செல்லுமுன் அங்குள்ள தொற்று நோய்கள் குறித்துத் தெரிந்துவைத்திருப்பது நல்லது : மருத்துவ வல்லுநர்கள்

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போக்கு இப்போது அதிகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போக்கு இப்போது அதிகரித்துள்ளது.
பயணிகள் தற்போது புதிதாக ஏற்பட்டிருக்கும் தொற்று நோய்கள் குறித்து அறிந்துவைத்திருப்பது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

வெளிநாடு சென்று சொந்த ஊருக்குத் திரும்புவோர் பெரும்பாலும் தோல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதுண்டு.

வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்கு முன்னர் சுகாதார வல்லுநர்களை நாடுவது சிறந்தது.

தேவையான மருந்துகள், ஊசி போன்றவற்றை விடுமுறைக்கு முன்னரே எடுத்துக்கொள்ள அது உதவும்.

பூச்சிக் கடி, கிருமித் தொற்று போன்றவற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாக நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையங்கள் தகவல் வெளியிட்டன.

கரீபியன், தென் கிழக்காசியப் பகுதிகளுக்குச் செல்வோருக்கு மருத்துவர்கள் கூறும் அறிவுரை:

- கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும்போது காலணிகள் இல்லாமல் நடக்க வேண்டாம்.
- நீர்ப்பகுதிகளுக்கு உகந்த காலணிகளை எடுத்துச்செல்லவும்.
- மழை பெய்தால் அதனைத் தொடர்ந்து கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்.

மலேரியா, டெங்கிக் காய்ச்சல் போன்றவை கொசுக்கடியால் ஏற்படுகின்றன. பூச்சிக் கொல்லி மருந்துகளால் அத்தகைய நோய் ஏற்படாமல் பாதுகாக்கலாம் என்று கூறப்படுகிறது. sunscreen களிம்புக்குப் பிறகு பூச்சிக்கொல்லி மருந்தை உபயோகிக்க வேண்டும்.

வன விலங்குகளையோ பிறரின் செல்லப் பிராணிகளையோ தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் பயணிகளிடம் வலியுறுத்துகின்றனர்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது முதலுதவிப் பொருட்களையும் கொண்டு செல்வது நல்லது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்