Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வீட்டைச் சுத்தம் செய்து, பாத்திரங்களைக் கழுவி, பானமும் ஊற்றிக் கொடுக்கும் Samsung-இன் புதிய இயந்திரம்

ஒரு காலத்தில், வீட்டுப் பணிகளைச் செய்யும் இயந்திர மனிதர்களும் பறக்கும் கார்களும் வெறும் கற்பனையாக மட்டுமே இருந்தன.

வாசிப்புநேரம் -
வீட்டைச் சுத்தம் செய்து, பாத்திரங்களைக் கழுவி, பானமும் ஊற்றிக் கொடுக்கும் Samsung-இன் புதிய இயந்திரம்

(படம்: Samsung)

ஒரு காலத்தில், வீட்டுப் பணிகளைச் செய்யும் இயந்திர மனிதர்களும் பறக்கும் கார்களும் வெறும் கற்பனையாக மட்டுமே இருந்தன.

ஆனால் இப்போது அவை மெல்ல மெல்ல நிஜமாகிக் கொண்டிருக்கின்றன!

வீட்டுப் பணிகளைச் செய்யும் இயந்திரங்களை அறிமுகம் செய்துள்ளது Samsung நிறுவனம்.

இவ்வாண்டு இணையம்வழி நடத்தப்பட்ட உலகளாவிய தொழில்நுட்பக் கண்காட்சியில் அத்தகைய 3 இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

Bot Handy எனும் இயந்திரத்தால், அறைகளைச் சுத்தம் செய்யமுடியும், பாத்திரங்களைக் கழுவமுடியும், உங்களுக்குப் பானங்களைக் கூடப் பரிமாறமுடியும்!

செயற்கை நுண்ணறிவு மூலம் கருவி, வீட்டிலுள்ள பொருள்களை அடையாளம் காண்கிறது. பின்னர் அந்தப் பொருள்களை ஏந்திச்செல்கிறது.

Bot Care எனும் மற்றொரு கருவி, இயந்திர உதவியாளராகப் பணிபுரியக்கூடியது.

உரிமையாளர்களின் தினசரி நடவடிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் பதிவு செய்து கொண்டு, கருவி அவ்வப்போது நினைவூட்டும்.

உரிமையாளர்களை ஓய்வு எடுக்கும்படி கூட அது அறிவுறுத்தும்.

JetBot 90 AI+, எனும் அறிவார்ந்த ஆற்றல் கொண்ட தூசு உறிஞ்சும் கருவியும் (robot vacuum) கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அது இவ்வாண்டு முற்பாதியில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.

மற்ற இயந்திரங்களின் விற்பனை குறித்து தெளிவான விவரங்கள் இல்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்