Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தி்றன்பேசிகளின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில், Samsung புதிய Note 20 கைத்தொலைபேசி அறிமுகம்

கொரோனா கிருமிப்பரவல் சூழலில், தி்றன்பேசிகளின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில், Samsung நிறுவனம் புதிய Note 20 கைத்தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
தி்றன்பேசிகளின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில், Samsung புதிய Note 20 கைத்தொலைபேசி அறிமுகம்

(கோப்புப் படம்: REUTERS/Aly Song)

கொரோனா கிருமிப்பரவல் சூழலில், தி்றன்பேசிகளின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில், Samsung நிறுவனம் புதிய Note 20 கைத்தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ரக கைத்தொலைபேசி, சிங்கப்பூர், அமெரிக்கா, உள்ளிட்ட 70 நாடுகளில் இம்மாதம் 21-ஆம் தேதி முதல் விற்கப்படும்.

பொருளியல் நெருக்கடியிலிருந்து, மெல்ல மெல்ல மீண்டு வரும் அறிகுறிகள் தென்படும் நிலையில், Huawei, Apple ஆகிய திறன்பேசி நிறுவனங்களுக்கு போட்டிகொடுக்க, பதிய கைத்தொலைபேசி அறிமுகம் செய்யப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், சவால்மிக்க பொருளியல் சூழலில் விலைமிகுந்த சாதனத்தை விற்பனை செய்வதற்கு இது சரியான நேரமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திறன்பேசிகளின் விலை, வாடிக்கையாளர்கள் சிலரைக் கவராமல் இருக்கலாம் என்பதையும் அவர்கள் சுட்டினர்.

இவ்வாண்டு, Apple நிறுவனத்தின் புதிய 5G தொழில்நுட்ப iPhone வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால், அதன் ரசிகர்கள் Samsung நிறவனத்திற்கு மாறும் சாத்தியம் குறைவு என்றும் கூறப்படுகிறது.

உலக அளவில் திறன்பேசி விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் 16 விழுக்காடு குறைந்தது.

நாடுகளில் அறிவிக்கப்பட்ட முடக்கங்களும், வாடிக்கையாளர்களிடையே நிலவும் அச்சமும் கைத்தொலைபேசி விற்பனையில் மந்தம் ஏற்படக் காரணங்களாயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்