Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மேம்பட்ட செயல்திறன், குறைந்த விலையில் புதிய Galaxy S21 கைத்தொலைபேசிகளை அறிமுகம் செய்வதாகக் கூறும் Samsung

புதிய ஆண்டை வரவேற்கும் வகையில்  Samsung நிறுவனம் அதன் புதிய Galaxy S21 கைத்தொலைபேசிகளை அறிமுகம் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
மேம்பட்ட செயல்திறன், குறைந்த விலையில் புதிய Galaxy S21 கைத்தொலைபேசிகளை அறிமுகம் செய்வதாகக் கூறும் Samsung

(படங்கள்: Samsung)

புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் Samsung நிறுவனம் அதன் புதிய Galaxy S21 கைத்தொலைபேசிகளை அறிமுகம் செய்துள்ளது.

மேம்பட்ட செயல்திறன் கொண்ட கைத்தொலைபேசி முன்னதாக வெளியிடப்பட்ட Galaxy S20 கைத்தொலைபேசியைவிட மலிவான விலையில் விற்கப்படும்.

கம்பிவிடம் இல்லாத மின்னூட்ட முறையைக் கொண்ட கைத்தொலைபேசியில் stylus எனப்படும் எழுதுகோலைப் பயன்படுத்தலாம்.

புதிய S21 Ultra கைத்தொலைபேசியில் 4 கேமராக்கள் பின்புறத்தில் உள்ளன. அவை இருட்டிலும் தெளிவான படங்கள் எடுக்கும் ஆற்றல் கொண்டவை என்று நிறுவனம் கூறியது.

கைத்தொலைபேசியின் முன்புறக் கண்ணாடி இதுவரை வெளியிடப்பட்ட ரகங்களில் இருந்ததைவிட ஆக வலிமையானது என்றும் கூறப்பட்டது.

இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரில் Galaxy S21 கைத்தொலைபேசிகள் விற்பனையாகும்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்