Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கவலைப்படுவதற்குத் தனியாக நேரம் ஒதுக்குங்கள்...

கவலைப்பட வேண்டாம் என்று அறிவுரை கூறுவது வழக்கம்.

வாசிப்புநேரம் -

கவலைப்பட வேண்டாம் என்று அறிவுரை கூறுவது வழக்கம்.

ஆனால், கவலை இல்லாதது வாழ்வா?

அதுவும் இந்தக் கொரோனா கிருமித்தொற்றுச் சூழலில், வேலையின்மை, சம்பள இழப்பு, ஊரடங்கு எனப் பலருக்கும் பல காரணங்களால் மன அழுத்தம்.

ஆனால் வாழ்க்கையில் கவலை இருக்கலாம். வாழ்க்கையே கவலையாக இருக்கக்கூடாது.


அதற்குச் சில குறிப்புகள்...


  • கவலைப்படுவதற்குத் தனியாக நேரம் ஒதுக்குங்கள்

ஒரு நாள் முழுவதும் கவலைப்படுவது, உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது.

அதற்கு மாறாக, கவலைப்படுவதற்கென சுமார் 30 நிமிடங்கள் ஒதுக்குமாறு ஒரு மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.

அல்லது, நிதிப் பிரச்சினைகளுக்கு ஒரு 15 நிமிடம், உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஒரு 15 நிமிடம் என்று கூட ஒதுக்கலாம் என்று Smarter Living இணையத்தளத்தில் டாக்டர் ஜென்னி டாயிட்ஸ் (Jenny Taitz) பகிர்ந்துகொண்டார்.

அந்த நேரங்களின்போது, கவலைகளைப் பட்டியலிடலாம். அவற்றைத் தீர்க்கும் முயற்சிகளை எடுக்க அது உதவும்.


  • மகிழ்ச்சியளிக்கும் பொருள்கள்

மகிழ்ச்சி அளிக்கும் பொருள்களின் மீது 60 விநாடிகள் கவனம் செலுத்துங்கள்.

பிடித்தவர்களின் படங்கள், இசை, செல்லப் பிராணிகள் என அது எதுவாகவும் இருக்கலாம்.

அவ்வாறு செய்வதன் மூலம், மனநிலை மாற வாய்ப்பு உண்டு.

மன அழுத்தத்திற்கான ஆகப் பெரிய மருந்து நன்றியுணர்வு தான்.


  • இழுத்து மூச்சுவிடுங்கள்

மூச்சுப் பயிற்சி மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கின்றது.

அதனால், மூச்சுப் பயிற்சிகள் சிலவற்றையும் செய்து பார்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்