Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கைத்தொலைபேசியை அதிக நேரம் பயன்படுத்துகிறீர்கள்?…கவனம்!

செய்தி நடத்திய கருத்தாய்வில் நேயர்கள் பலர் நாளொன்றுக்குக் கைத்தொலைபேசியில் 5 முதல் 6 மணி நேரம் வரைச் செலவிடுவதாகக் குறிப்பிட்டனர்.

வாசிப்புநேரம் -
கைத்தொலைபேசியை அதிக நேரம் பயன்படுத்துகிறீர்கள்?…கவனம்!

(படம்: Pixabay)

விரல் நுனியில் தகவல் அளிக்கும் கருவி, கைத்தொலைபேசி.

தினசரி வேலைக்குத் தேவையான அனைத்தும் கைத்தொலைபேசியில் கிடைப்பதால், நம்மில் பலர் சாதனத்தை அதிக நேரம் பயன்படுத்துகிறோம்.

செய்தி நடத்திய கருத்தாய்வில் நேயர்கள் பலர் நாளொன்றுக்குக் கைத்தொலைபேசியில் 5 முதல் 6 மணி நேரம் வரைச் செலவிடுவதாகக் குறிப்பிட்டனர்.

நாளொன்றுக்குக் கைத்தொலைபேசில் செலவிடப்படும் நேரம் -
5-6 மணி நேரம் - 44%
2-4 மணி நேரம் - 32%
1-2 மணி நேரம் - 24%

கைத்தொலைபேசியை அதிகம் பயன்படுத்துவதால், ஏற்படும் பிரச்சினைகள் யாவை?

அதனையொட்டி, மருத்துவர் செந்தமிழ்ச் செல்வனுடன் பேசியது 'செய்தி'.

அலுவலக நேரத்தில் கணினி, மற்ற நேரத்தில் கைத்தொலைபேசி என்று இந்த சாதனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால், கண் பிரச்சினை, மறதி, தசை வலி, தூக்கப்பற்றாக்குறை, புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்குச் சாத்தியம் உள்ளது. எவ்வளவு முடியுமோ, சாதனங்களின் பயன்பாட்டைக் குறைப்பது சிறப்பு.

உடல் வலி, கண் பிரச்சினைகள்
பொதுவாக, நம்மில் பலர் தலையைக் குனிந்து, கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதுண்டு. சாதனத்தை அதிக நேரம் பயன்படுத்தினால், கழுத்து வலி, முதுகு வலி போன்றவை ஏற்படலாம். அத்துடன், கைத்தொலைபேசியிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு கண்ணுக்குக் கேடு விளைவிக்கலாம்.

நோய்
சுறுசுறுப்பாக செயல்படாமல் இருப்பது, இதய நோய், புற்றுநோய், ஆகியவற்றால் பாதிக்கக்கூடிய சாத்தியத்தை அதிகரிக்கலாம்.

தூக்கப்பற்றாக்குறை
தூங்குவதற்கு முன்னால், நம்மில் பலர் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதுண்டு.
சாதனத்திலிருந்து வெளியாகும் blue light எனும் கதிர்கள் தூக்கம் வருவதைத் தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இதனால், தூக்கப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது.

கவனக்குறைவு
கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவது சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நடவடிக்கை இல்லையென்றாலும், அதை அதிக நேரம் பயன்படுத்துவது மூளைக்குச் சோர்வைத் தரும். கவனக்குறைவு, மறதி ஆகியவை ஏற்படலாம்.

கைத்தொலைபேசியில் செலவிடும் நேரத்தை எப்படி குறைப்பது?

- புதிய பொழுதுபோக்கு நடவடிக்கையில் ஈடுபடலாம்
- படுக்கை அறையில் சாதனங்களை வைப்பதைத் தவிர்க்கவேண்டும். தூங்கும் முன், அவை பயன்படுத்தாமல் இருக்க உதவும்.
- கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கு ஒரு வரையறை அமைக்கலாம். உதாரணத்திற்கு, நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது என தீர்மானம் எடுத்துக்கொள்ளலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்