Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கடலில் ஏற்படும் கப்பல் விபத்துகளுக்கு யார் பொறுப்பு ?

அண்மையில் இலங்கைக் கடற்பகுதியில் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட X-Press Pearl எனும் கப்பல் கிட்டத்தட்ட 13 நாள்களுக்கு எரிந்து, பின் கடலில் மூழ்கியது.

வாசிப்புநேரம் -
கடலில் ஏற்படும் கப்பல் விபத்துகளுக்கு யார் பொறுப்பு ?

(படம்:Sri Lanka Air Force/AP)

இலங்கை தற்போது மோசமான கடல் சுற்றுச்சூழல் பேரிடரைச் எதிர்நோக்கிவருகிறது.

அண்மையில் இலங்கைக் கடற்பகுதியில் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட X-Press Pearl எனும் கப்பல் கிட்டத்தட்ட 13 நாள்களுக்கு எரிந்து, பின் கடலில் மூழ்கியது.

அந்தச் சம்பவம் கடலில் ஏற்படும் கப்பல் விபத்துகளுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அது குறித்து CNA சில நிபுணர்களிடம் பேசியது.

மூழ்கிய கப்பலின் சில விவரங்கள்:

கப்பல் சிங்கப்பூர் நிறுவனமான X-Press feeders-க்குச் சொந்தமானது.

நிறுவனத்திற்கு உலகின் பல நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன.

கப்பல் மே 20 ஆம் தேதி இந்தியாவிலிருந்து கொழும்புவிற்குச் சென்று கொண்டிருந்த போது இலங்கையின் மேற்குக் கடற்பகுதியில் தீப்பிடித்தது.

சுற்றுச்சூழல் பாதிப்பு:

எரிந்த கப்பல் சுற்றுச்சூழலுக்கு பல கேடுகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவுகள் ஏற்பட்டிருக்கலாம்.

டன் கணக்கான பிளாஸ்டிக் குப்பை ஏற்கெனவே கடற்கரைகளில் குவிந்துள்ளன.

மூழ்கிய கப்பலில் சுமார் 25 டன் nitric acid, sodium hydroxide போன்ற வேதிப்பொருள்கள் இருந்தன.

சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம், கப்பல் சம்பவத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க இலங்கை மற்றும் இதர தரப்புகளுடன் பேசி வருகிறது.

கப்பல் பதிவுசெய்யப்பட்ட இடம் முக்கியமானதா ?

கப்பல் பதிவுசெய்யப்படும் இடம் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவு.

பொதுவாகக் கப்பல் விபத்துச் சம்பங்களுக்குப்
பதிவுசெய்யப்பட்ட இடம் பொறுப்பேற்கவேண்டும் என்பதில்லை.

அனைத்துலக வர்த்தகத்தில் ஈடுபடும் கப்பல்கள் கட்டாயம் ஒரு நாட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். அது அனைத்துலகச் சட்டப்படிக் கட்டாயம்.

கப்பல் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்படவேண்டும்.

கப்பல் பதிவு செய்யப்பட்ட நாட்டின் பொறுப்பு கப்பலின் தரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வது.

கப்பல் கட்டப்பட்டவிதம், கப்பல் கடல் பயணத்திற்குப் பாதுகாப்பானதா, உகந்ததா போன்ற முக்கிய அம்சங்களைக் கப்பலைப் பதிவு செய்யும் நாடு ஆராயும். கப்பலால் கடலின் சுற்றுப்புறத்திற்குத் தீங்கு ஏற்பட்டால், அது குறித்தும் நாடு விசாரிக்கும்.

கப்பலைப் பதிவு செய்யும் போது கருத்தில் கொள்ளப்படும் சில முக்கிய அம்சங்கள்:

--வரிச் சலுகைகள்

--நாட்டின் நற்பெயர், தரமான சோதனைகள்

சிங்கப்பூர், ஹாங்காங், பனாமா போன்ற பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் மீது அதிக நம்பிக்கை இருக்கும்.

சிங்கப்பூர் பதிவில் மட்டும் 4,400-க்கும் மேற்பட்ட கப்பல்கள் உள்ளன.

உலகில் ஆக அதிக கப்பல் பதிவுகளைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூர் 5ஆவது இடத்தில் உள்ளது.

விபத்துகளுக்கு யார் பொறுப்பு?

சேதங்களுக்குப் பொதுவாகப் பதிவு செய்யப்பட்ட நாடு பொறுப்பல்ல.

சம்பவம் ஏற்படும் துறைமுகமும் பெரும்பாலான நேரங்களில் பொறுப்பல்ல.

கப்பலில் உள்ள சரக்குகளின் சேதத்திற்கும் கடலில் ஏற்பட்ட சுற்றுப்புறப் பிரச்சினைகளுக்கும் கடலோடிகள், கப்பலின் உரிமையாளர்களே பெரும்பாலும் பொறுப்பேற்கவேண்டும்.

சேதங்களுக்கான இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கவேண்டும்.

இருப்பினும் சம்பவத்திற்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு,பின் யார் பொறுப்பு என்று அறிவிக்கப்படும்.

இலங்கையின் நிலை:

தற்போது ஏற்பட்ட சம்பவத்திற்கு இலங்கை இழப்பீடு கோரவிருக்கிறது.

சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட அதிக நாள் எடுக்கும் என்று X-Press Feeders கூறியுள்ளது.

கப்பலுக்குக் காப்பீடு உள்ளதால் பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை என அது தெரிவித்தது.

தற்போது இலங்கைக் கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்