Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அறிவார்ந்த கைக்கடிகாரம் (Smartwatch) உயிரைக் காப்பாற்றுமா?

அசாதாரண இதயத்துடிப்புகள் கண்டறியப்பட்டால், அது ஆபத்துக்கான அறிகுறி என்று எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அர்த்தமாகாது என்று கூறப்படுகிறது. 

வாசிப்புநேரம் -
அறிவார்ந்த கைக்கடிகாரம் (Smartwatch) உயிரைக் காப்பாற்றுமா?

(படம்: Pixabay)

Smartwatch எனும் அறிவார்ந்த கைக்கடிகாரம் உயிரைக் காப்பாற்ற உதவுமா?

இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் அறிவார்ந்த கைக்கடிகாரங்கள் குறித்து மருத்துவர்கள் உற்சாகமும் அதே வேளையில் கவலையும் அடைகின்றனர்.

அதுப்பற்றி The New York Times தகவல் வெளியிட்டது.

Apple, Samsung, Withings, Fitbit, AliveCor போன்ற நிறுவனங்கள் ECG எனும் இதய மின்துடிப்புச் சோதனையைக்
காட்டும் கைக்கடிகாரங்களை உருவாக்கி வருகின்றன.

அறிவார்ந்த கைக்கடிகாரம் பயனுள்ளதா?

அதன் துல்லியம், விலைக்கேற்ற செயல்திறன் ஆகியவற்றைப் பற்றி உறுதியான சான்றுகள் இல்லை.

ஆனால் சில வகையான அசாதாரண இதயத் துடிப்புகளைக் கண்டறிய அவை உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

அத்தகைய அறிவார்ந்த கைக்கடிகாரங்களைப் பயன்படுத்திய சிலர், தக்க நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்த சம்பவங்களும் நடந்துள்ளன.

சீரற்ற இதயத்துடிப்பைக் கண்டறிய கடிகாரம் உதவியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், சில சமயம் இதயத் துடிப்பில் சாதாரணமாக ஏற்படும் சிறிய வேறுபாடுகள் கூட, சிலருக்குத் தேவையற்ற கவலையை ஏற்படுத்தலாம்.

அறிவார்ந்த கைக்கடிகாரங்கள் உண்மையில் உயிர்களைக் காப்பாற்ற உதவுமா என்பதை மதிப்பிட கூடுதல் ஆய்வுகள் நடைபெறுவதாக The New York Times குறிப்பிட்டது.

இத்தகையச் சாதனங்கள் சீரற்ற இதயத்துடிப்பு குறித்துப் பயனீட்டாளர்களை எச்சரிக்கக்கூடும்.

ஆனால் அசாதாரண இதயத்துடிப்புகள் கண்டறியப்பட்டால், அது ஆபத்துக்கான அறிகுறி என்று எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அர்த்தமாகாது என்று கூறப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்