Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

திறன்பேசி மெதுவடைந்துவிட்டதா? என்ன செய்யலாம்?

மற்ற மின்சாதனங்கள் போன்று திறன்பேசிகளின் செயல்பாடும் காலப்போக்கில் மெதுவடைவது வழக்கம் தான்.

வாசிப்புநேரம் -
திறன்பேசி மெதுவடைந்துவிட்டதா? என்ன செய்யலாம்?

கோப்புப்படம்: REUTERS/AFP

மற்ற மின்சாதனங்கள் போன்று திறன்பேசிகளின் செயல்பாடும் காலப்போக்கில் மெதுவடைவது வழக்கம் தான்.

ஆனால், அதற்காகப் புதிய திறன்பேசிகளை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்கிறது The New York Times செய்தி நிறுவனம்.

மெதுவடைந்த திறன்பேசிகளை மேம்படுத்த இதோ சில குறிப்புகள்...

மின்கலனை (battery) மாற்றுவது

மின்கலன் சரியாகச் செயல்படாதபோது திறன்பேசியின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்காகச் சில நிறுவனங்கள் திறன்பேசிகளை மெதுவடையச் செய்கின்றன.

அதனால், திறன்பேசி மேலும் நன்றாகச் செயல்பட அதன் மின்கலனை மாற்றலாம்.

திறன்பேசியின் இருப்பு

திறன்பேசியில் 64 அல்லது 128 கிகாபைட் (gigabytes) இருப்பு இருந்தாலும், அதை முழுமையாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்றது The New York Times.

நிறைய இருப்பு காலியாக இருந்தால், திறன்பேசி வேகமாகச் செயல்படும் என்று கூறப்படுகிறது.

புதிய தொடக்கம்

திறன்பேசியில் உள்ள படங்கள், தகவல்கள் ஆகியவற்றைக் கணினியில் பாதுகாத்துவிட்டு, திறன்பேசியில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம்.

பிறகு, திறன்பேசியின் செயல்பாட்டு அமைப்பை மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம்.

அதன் மூலம், மென்பொருளில் உள்ள பிரச்சினைகள் சரியாக வாய்ப்பு உண்டு. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்