Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் Soy Sauce எப்படித் தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

உலகின் பல பகுதிகளில் உணவுத் தயாரிப்பிலும், தயாரிக்கப்பட்ட உணவிலும் சோயா சாஸ் (Soy sauce) ஓர் அத்தியாவசியப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 

வாசிப்புநேரம் -

உலகின் பல பகுதிகளில் உணவுத் தயாரிப்பிலும், தயாரிக்கப்பட்ட உணவிலும் சோயா சாஸ் (Soy sauce) ஓர் அத்தியாவசியப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதன் தோற்றத்தையும், தயாரிப்பு முறையையும் தெரிந்துகொள்வோம்.


தோற்றம்:

உணவில் சுவை சேர்க்கும் ஒருவகை குழம்பான சோயா சாஸ், சீனாவில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன் உருவானதாக நம்பப்படுகிறது.

சீனாவில் அக்காலத்தில் உள்ள ஜியாங் (Chiang) என்ற குழம்பைத் தான் சோயா சாஸ் என இன்று அழைக்கிறோம். அதற்கு ஒப்பான குழம்பு ஜப்பான், கொரியா, தென் கிழக்காசியா போன்ற இடங்களிலும் தோன்றியுள்ளன.

ஜப்பானில் ஷோயு (Shoyu) என்றழைக்கப்படும் குழம்பிலிருந்து, சோய்(soy) என்ற வார்த்தை வந்தது. அதை உருவாக்கத் தேவையான பருப்புவகையான Soya Beans (சோயாபீன்ஸ்) குழம்பின் பெயரால் தான் அந்தப் பெயரைப் பெற்றதாம்.

ஆசிய நாடுகளில் சோயா சாஸ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் அதனை "கிச்சாப்" (kicap) என்று மக்கள் அழைப்பது வழக்கம்.


தயாரிப்பு முறை:


தேவையான பொருள்கள்

சோயாபீன்ஸ், கோதுமை, உப்பு மற்றும் நொதி (yeast)


பாரம்பரியச் செய்முறை

  1. சோயாபீன்ஸைத் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
  2. கோதுமையை வறுத்து இடித்துவைத்துக்கொள்ளவேண்டும்.
  3. சோயாபீன்ஸையும் இடித்துவைக்கப்பட்ட கோதுமையை, நொதியுடன் கலக்கவேண்டும்.
  4. கலவையை 2 அல்லது மூன்று நாள்கள் வைத்திருக்கவேண்டும்.
  5. கலவையுடன் தண்ணீர், உப்பு சேர்க்கவேண்டும்.
  6. அதை 5இலிருந்து 8 மாதங்கள் வரை தண்ணீர்த்தொட்டியில் புளித்து நுரைக்கவைக்கவேண்டும். (Ferment)
  7. பின் கலவையைத் துணியில் பரப்பி, வடிகட்டி, அதிலிருந்து வரும் திரவத்தைச் சேகரிக்கவேண்டும்
  8. திரவத்தில் உள்ள கிருமிகளைக் கொல்ல அதைச் சுத்திகரிக்கவேண்டும்
  9. கடைசியாக, திரவம் புட்டிகளில் அடைக்கப்பட்டு சோயா சாஸாக விற்கப்படுகிறது

பாரம்பரியச் செய்முறைகொண்டு சோயா சாஸ் தயாரிப்பதற்குச் சுமார் 5இலிருந்து 8 மாதங்கள் எடுக்கும்.

ரசாயன வழியில் செய்யப்படும் சோயா சாஸ் வகைகளைச் சுமார் மூன்றே நாள்களில் தயாரித்துவிடலாம்.

இந்த முறையில் சோயாபீன்ஸ் 80 டிகிரி செல்சியஸில் சூடாக்கப்பட்டு, hydrochloric Acid-உடன் கலக்கப்படுகிறது.

இருப்பினும் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் சோயா சாஸ் வகைகளின் சுவையே சிறந்ததெனக் கருதப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்