Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடல்நலம் மேம்பட இயற்கையுடன் இரண்டு மணி நேரம்

இயற்கையுடன் நேரத்தைச் செலவுசெய்தால் உடல்நலம் மேம்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூங்கா, ஏரி, வனப்பகுதி ஆகிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இளைப்பாறுவதால் பல நன்மைகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
உடல்நலம் மேம்பட இயற்கையுடன் இரண்டு மணி நேரம்

கோப்புப் படம்: Today

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இயற்கையுடன் நேரத்தைச் செலவுசெய்தால் உடல்நலம் மேம்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூங்கா, ஏரி, வனப்பகுதி ஆகிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இளைப்பாறுவதால் பல நன்மைகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனஉளைச்சல், ரத்த அழுத்தம், இதயநோய் ஏற்படும் அபாயம் ஆகியவை குறையும்: மனநலம் மேம்பட்டு ஆயுள் நீடிக்கும் என்கிறது ஆய்வு.

வாரந்தோறும் சுமார் 120 நிமிடங்களுக்கு இயற்கையுடன் இருக்கவேண்டும் என்று Scientific Reports சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டது.

'Monitor of Engagement with the Natural Environment ' என்னும் கருத்தாய்வின் தகவல்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2014ஆம் ஆண்டிற்கும் 2016ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இங்கிலாந்தைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்