Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வானில் வலம் வரவிருக்கும் ஸ்ட்ராபெர்ரி நிலா

நாளை பௌர்ணமி. சூரியனுக்கு நேரெதிரே நிலா நாளை தோன்றும்.

வாசிப்புநேரம் -
வானில் வலம் வரவிருக்கும் ஸ்ட்ராபெர்ரி நிலா

படம்: Pixabay

நாளை பௌர்ணமி. சூரியனுக்கு நேரெதிரே நிலா நாளை தோன்றும்.

மூன்று நாட்களுக்கு அது முழு நிலாவாகக் காட்சியளிக்கும்.

ஜூன் மாதம் வசந்தகாலத்தில் தோன்றும் இத்தகைய நிலா ஸ்ட்ராபெர்ரி நிலா என்றும் அழைக்கப்படுகிறது.

வட அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை அறுவடை செய்யும் காலத்தில் இந்த நிலா வருவதால் அதற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தண்ணீர் கலந்த தேனைப் பதப்படுத்தும்போது Mead பானம் தயாராகிறது.

பழங்கால ஐரோப்பிய வழக்கத்தின்படி இந்த நிலாவுக்கு Mead நிலா அல்லது தேன் நிலா என்ற பெயர்களும் உண்டு.

திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் மாதத்தை தேனிலவு என்று அழைக்கும் வழக்கம் 1500களில் பிரபலம்.

ஜூன் மாதத்தில் பெரும்பாலும் திருமணம் நடைபெறும் வழக்கம் இருந்து வந்ததால் இது தேன் நிலவு என்ற பொருத்தமான பெயரைப் பெற்றது.

ஐரோப்பியர்கள் இதை Rose நிலா என்றும் அழைக்கின்றனர்.

ஆண்டின் இந்தக் காலத்தில் வரும் நிலாவின் நிறத்தையொத்து அந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சிலர் நம்புகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்