Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பதற்றம், மனக்கவலை - சமாளிக்கச் சில வழிகள்

நம்மில் பலருக்கு சில நேரங்களில் மனக்கவலைகள் இருக்கலாம். எந்நேரமும் கவலைகள் தோன்றினால், அவை பதற்றம், மனக்கவலைக் கோளாறு ஆகியவற்றுக்கு வழி வகுக்கலாம். அதைச் சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து டாக்டர் ஷெரிலும், டாக்டர் காசிடேயும் பகிர்ந்துகொள்கிறார்கள்...  

வாசிப்புநேரம் -
பதற்றம், மனக்கவலை - சமாளிக்கச் சில வழிகள்

படம்: Pixabay

நம்மில் பலருக்கு சில நேரங்களில் மனக்கவலைகள் இருக்கலாம். எந்நேரமும் கவலைகள் தோன்றினால், அவை பதற்றம், மனக்கவலைக் கோளாறு ஆகியவற்றுக்கு வழி வகுக்கலாம்.

அதைச் சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து டாக்டர் ஷெரிலும், டாக்டர் காசிடேயும் பகிர்ந்துகொள்கிறார்கள்...

1. நீங்கள் ஆபத்தில் இல்லை என்று நம்புங்கள்

மனக்கவலைக் கோளாறு உள்ளவர்களுக்கு, எந்நேரமும் ஆபத்தில் இருப்பது போன்ற உணர்வு தோன்றுவதால் அவர்களுக்குப் பதற்றம் ஏற்படும்.

திடீரெனத் தோன்றும் பதற்றம் ஒருவரைப் பெருமளவில் பாதிக்கலாம். அதைப் போக்க, தாம் ஆபத்தில் இல்லை என்பதை அவர் நம்பவேண்டும் என்கிறார் உளவியல் நிபுணர், டாக்டர் கேரன் காசிடே (Karen Cassiday). காரணமின்றிப் பதற்றம் தோன்றுவதை உணரும்போது, அது தானாகவே மறையும்.

2. அமைதியாய் இருங்கள், மெதுவாய் மூச்சுவிடுங்கள்

மனக்கவலைகளால் அவதியுறுவோருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படலாம். அதிவேகமாக மூச்சு விடுவதால் நெஞ்சுத் தசைகள் இறுக்கமாகி வலி ஏற்படுவதாகச் சொல்கிறார் டாக்டர் காசிடே.

நெஞ்சுவலியைத் தவிர்க்க அமைதியாய் இருந்து, மெதுவாக மூச்சுவிட வேண்டும் என்கிறார் அவர்.

3. சரியான அளவில் சாப்பிடவேண்டும்

சரியான அளவில் சாப்பிட்டு போதிய அளவு தண்ணீர் குடிப்பதால் உடல் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.
ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடினால், பதற்றம் ஏற்படலாம் என்கிறார் டாக்டர் ஷெரில் (Sherrill)கூறுகிறார்.

4. அடிக்கடி உடற்பயிற்சி செய்யவேண்டும்

குறைந்த அளவே உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதால், மனக்கவலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

டைச்சீ (taichi), யோகாசனம் போன்ற உடற்பயிற்சிகள் மனத்தை அமைதிப்படுத்தி மனக்கவலையைக் குறைக்கக்கூடியவை என டாக்டர் காசிடே சொல்கிறார்.

மூச்சுப் பயிற்சிகள் உடலில் Endorphins உற்பத்தி செய்ய உதவுகின்றன. அதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும் என்றும் அவர் கூறுகிறார்.

5. போதுமான தூக்கம் வேண்டும்

நாள்தோறும் சரியான நேரத்திற்கு தூங்கவேண்டும். முறையான தூக்கமின்மை மனக்கவலை தரக்கூடியது என்று டாக்டர் ஷெரில் சொல்கிறார்.

2016ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், தூக்கமின்மை மனக்கவலையை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டது.

மனக்கவலை ஒருவரின் வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கக்கூடியது, என்றாலும், அதனால் ஒருவர் தம் வாழ்க்கையில் விரும்பிச் செய்பவற்றை நிறுத்தக்கூடாதென்று டாக்டர் காசிடே கருதுகிறார்.

விருப்பமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மனக்கவலை, மனப்பதற்றம் குறையும் வாய்ப்புகள் அதிகம்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்