Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள செயற்கைச் சர்க்கரை வகைகளை நாடும் போக்கு...

சிங்கப்பூரில் வழக்கமான வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக செயற்கைச் சர்க்கரை வகைகளை நாடும் போக்கு அதிகரித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் வழக்கமான வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக செயற்கைச் சர்க்கரை வகைகளை நாடும் போக்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஓராண்டில் 40 டன்னுக்கும் அதிகமான அளவில் மாற்றுச் சர்க்கரை வகைகள் உட்கொள்ளப்பட்டதாக அனைத்துலக ஆய்வொன்று கூறுகிறது.

வழக்கமாக வெளியில் நாம் அருந்தும் பானங்களில் இவை அதிகம் சேர்க்கப்படுகின்றன.


மீனுஸ்ரீ சந்திரசேகரன்

ஊட்டச்சத்து நிபுணர் 


அண்மையில் இந்த மாற்றுச் சர்க்கரை வகைகள் சிங்கப்பூரில் மிகவும் பிரபலமாகி வருகின்றன. ஏனென்றால் நீரழிவு நோய் மிகவும் பரவலாக இருக்கிறது. இப்போது நிறைய குளிர்பானங்களிலும் இந்த மாற்றுச் சர்க்கரை வகைகளைப் பயன்படுத்துகிறார்கள்.


எதில் சர்க்கரை இல்லை என்று போடப்பட்டிருக்கிறதோ அதைக் குடித்துப் பார்த்தாலே அதில் இன்னும் இனிப்புத் தன்மை உள்ளது என்பது தெரியும். ஏனென்றால் அதில் இன்னும் மாற்றுச் சர்க்கரை வகைகளைப் பயன்படுத்துகிறார்கள்.


கல்பனா பாஸ்கரன்
தலைவர், ஊட்டச்சத்துப் பிரிவு
துமாசிக் பலதுறைக் கல்லூரி


1970களின் ஆய்வுகளைப் பார்த்தால் ஆய்வக எலிகள்மீது சில ஆராய்ச்சிகளைச் செய்திருக்கின்றனர். அதில் மாற்றுச் சர்க்கரை வகைகள் புற்றுநோயை உண்டாக்கும் என்பது தெரியவந்தது.

ஆனால் அதற்குப் பிறகு வேறு எந்த ஆய்வுகளும் அதை நிரூபிக்கவில்லை.

நீரிழிவு நோயைத் தவிர்க்கவும் ஆரோக்கிய வாழ்க்கைமுறையை முன்னிட்டும் பலர் வழக்கமான சர்க்கரைக்குப் பதிலாக மாற்றுச் சர்க்கரை வகைகளை நாடுகின்றனர்.

மாற்றுச் சர்க்கரை, உடல் ஆரோக்கியத்துக்கு உண்மையில் நல்லதா? சரியானதை எப்படித் தேர்ந்தெடுப்பது? இவைபற்றி இன்றிரவு ஒன்பதரை மணிக்கு வசந்தத்தில் ஒளிபரப்பாகும் எதிரொலி நிகழ்ச்சியில் தெரிந்துகொள்ளலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்