Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சேர்க்கப்படும் சர்க்கரைக்கும் இயற்கையான சர்க்கரைக்கும் வேறுபாடு?

உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரையை விட இயற்கையாகவே உணவுகளில் இருக்கும் சர்க்கரை ஆரோக்கியமானது.

வாசிப்புநேரம் -
சேர்க்கப்படும் சர்க்கரைக்கும் இயற்கையான சர்க்கரைக்கும் வேறுபாடு?

(படம்: Pixabay)


உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரையை விட இயற்கையாகவே உணவுகளில் இருக்கும் சர்க்கரை ஆரோக்கியமானது.

உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை, இரண்டாம் வகை நீரிழிவு நோய், இதய நோய், உடல் பருமன் ஆகியவற்றையும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் நோய்களையும் ஏற்படுத்தும்.

பழங்களும் காய்கறிகளும் ஆரோக்கியமான உணவுகளாகக் கருதப்பட்டாலும் அவற்றின் சாறு உடல் நலத்திற்கு உகந்ததாகாது.

சாறு பிழியும்போது நார்ப்பொருள் அகற்றப்படுவதால், அதிலிருக்கும் சர்க்கரையின் விகிதம் அதிகரிக்கிறது. இதுவே உடல் நலத்தைப் பாதிக்கும்.

இந்த வகையான சர்க்கரை, சாப்பாட்டுப் பொருள்களில் எந்த அளவிற்கு சேர்க்கப்படுகிறது என்பது 2020-ஆம் ஆண்டு முதல் உணவுப் பொட்டலங்களில் குறிக்கப்படும்.

முடிந்த அளவு, உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரையை உட்கொள்ளவேண்டாம் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்