Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உணவுத் தயாரிப்புப் பொருள்களில் புலியாக விளங்கும் புளி

இந்திய அறுசுவை உணவில் புளிப்பு முக்கிய இடம் வகிக்கிறது. பல  இந்திய உணவுவகைகளுக்குச் சுவை சேர்ப்பதில் புளி முக்கிய அம்சம். அது உணவுக்குச் சுவையூட்ட மட்டுமே பயன்படுகிறது என்று குறைத்து எடைபோட வேண்டாம்!

வாசிப்புநேரம் -

இந்திய அறுசுவை உணவில் புளிப்பு முக்கிய இடம் வகிக்கிறது. பல இந்திய உணவுவகைகளுக்குச் சுவை சேர்ப்பதில் புளி முக்கிய அம்சம். அது உணவுக்குச் சுவையூட்ட மட்டுமே பயன்படுகிறது என்று குறைத்து எடைபோட வேண்டாம்!


புளியைப் பற்றிய சில சுவையான தகவல்கள்:


தோற்றம்

புளி என்பது ஒரு மரத்தின் பெயர். அதன் பழங்கள் இந்தியாவில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய கிழக்கில் அது "தமர் இந்தி" (Tamar Hindi) அதாவது இந்தியப் பேரீச்சம்பழம் என்று அழைக்கப்படுவதால் ஆங்கிலத்தில் Tamarind என்ற பெயர் வந்தது.

ஆனால் அது ஆப்பரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளில் முதன்முதலில் தோன்றியது.


பயன்பாடு

புளியங்காய்:

சுவை: புளிப்பு

  • குழம்பு
  • மீன் வகைகளுக்குச் சுவையூட்ட
  • சோற்றுக்குச் சுவையூட்ட
  • காயவைத்துப் பதப்படுத்திச் சாப்பிடலாம்

புளியம்பழம்:

சுவை: புளிப்பு கலந்த இனிப்பு

  • இனிப்புவகைப் பண்டங்கள்
  • இனிப்பு பானங்கள்
  • பழங்கள் கொண்ட சிற்றுண்டி வகை


இரண்டும்:

  • ரொட்டிக்குப் பயன்படுத்தப்படும் ஜாம் வகை (Jam)
  • மிட்டாய் வகை
  • ஊறுகாய் வகை
  • தாய்லந்துக் காய்கறிக் கலவை உணவுவகை (Pad Thai)


சுகாதாரப் பயன்பாடுகள்

உணவுவகைகளுக்குச் சுவையளிப்பதோடு புளிய மரத்தின் சில பகுதிகள் உடல் சுகாதாரத்தை மேம்படுத்தலாம் என்றும் நம்பப்படுகிறது. பழத்தின் சாறு, இலைகள், பூக்கள், மரப்பட்டை ஆகிய புளியமரப் பாகங்கள் நாட்டுவைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் மட்டுமல்லாமல் மத்திய, தென்னமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், தாய்லந்து, இந்தோனேசியா எனப் பல நாடுகளிலும் புளி ஒரு முக்கிய உணவுப்பொருள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்