Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தீபாவளியும் பாரம்பரியமும் - வாசலில் தோரணம் எதற்கு?

தோரணம் வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல. 

வாசிப்புநேரம் -


தீபாவளியன்று மட்டுமல்ல; மங்கல நிகழ்வுகள் பலவற்றுக்கும் இந்தியர்கள் வீட்டுவாசலைத் தோரணங்களால் அலங்கரிப்பது வழக்கம்.

தோரணம் வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல.

(படம்: நித்திஷ்)

அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு எவ்வளவோ உள்ளன.

1. பச்சை நிறம் பார்க்க மனத்துக்கு இதமாக இருக்கும். பதற்றமான நிலையில் இருக்கும்போது பச்சை நிறம் மனத்தைச் சாந்தப்படுத்தும்.

வீட்டிற்குள் நுழையும் முன்னர் வாசலில் பச்சை நிறத்தோரணத்தைப் பார்த்தால் உள்ளம் குளிரும் என்று சொல்லப்படுகிறது.

2. அழைப்பிதழ்கள் அச்சிடப்படாத அக்காலத்தில் ஒரு வீட்டில் மங்கல நிகழ்வு நடக்கிறதா, அமங்கல நிகழ்வு நடக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள தோரணங்கள் பயன்பட்டன.

(படம்: நித்திஷ்)

3. தோரணங்களில் மாவிலைத் தோரணம் ஒருவகை. அதற்குக் கிருமியைத் தடுக்கும் குணம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

4. மாவிலைத் தோரணங்கள் சுற்றுப்புறத்தில் இருக்கும் மிதமிஞ்சிய கரியமில வாயுவை உறிஞ்சி, வீட்டிற்குள் காற்றைச் சுத்தம் செய்வதாக நம்பிக்கை.

5. பொதுவாக மாவிலை, தென்னங்குருத்துத் தோரணங்களை ஒற்றைப் படையில் கட்டுவது இந்துக்களின் வழக்கம்.

6. அந்தக் காலத்தில் தென்னங்குருத்து, மாவிலை ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே தோரணங்கள் செய்யப்பட்டன. பின்னர் காலப்போக்கில் கண்ணாடி, துணி, நூல், பஞ்சு, பிளாஸ்டிக் ஆகியவற்றைக் கொண்டு, அவை பல்வேறு வண்ணங்களில் செய்யப்பட்டன.

  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்