Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இரத்த அழுத்தத்தைக் குறைக்க மருந்துகளின் அளவுக்கே உடற்பயிற்சியும் சிறந்தது

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உடற்பயிற்சி செய்யத் தொடங்கினால், மருந்து உட்கொண்டால் கிடைக்கும் அளவுக்கு அதே நன்மைகள் கிடைக்குமாம்!

வாசிப்புநேரம் -
இரத்த அழுத்தத்தைக் குறைக்க மருந்துகளின் அளவுக்கே உடற்பயிற்சியும் சிறந்தது

படம்: REUTERS/Kham

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உடற்பயிற்சி செய்யத் தொடங்கினால், மருந்து உட்கொண்டால் கிடைக்கும் அளவுக்கு அதே நன்மைகள் கிடைக்குமாம்!

400 சோதனைகளின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் அது தெரியவந்தது.

குறிப்பாக, சிஸ்டாலிக் எனப்படும் மேல்நிலை அழுத்தம் 140 புள்ளிகளுக்கு மேல் கொண்டவர்களுக்கு இந்த முடிவுகள் பொருந்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அனைத்துவிதமான உடற்பயிற்சிகளுக்கும் இந்த முடிவுகள் பொருந்துமாம்.

உடலை வருத்தாமல் செய்யக்கூடிய எளிமையான பயிற்சியாலும் ஓரளவு நன்மை உண்டு என்கிறது ஆய்வு.

ஆனால், 55 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே ஆய்வின் முடிவு சற்று வேறுபடுகிறது. 

வயதின் காரணமாக அவர்களுடைய இரத்தக்குழாய் விறைத்துப்போவதாகவும் உடற்பயிற்சி செய்வதால் இந்த நிலையில் அதிக மாற்றம் ஏற்படுவதாகத் தெரியவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், உடல் எடை குறைவது, கெட்ட கொழுப்பின் அளவு குறைவது, தொப்பை குறைவது போன்ற நன்மைகள் கிடைக்கவே செய்யும்.

ஒட்டுமொத்தமாக அது இதயத்தை வலுப்படுத்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்