Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

டிரம்ப், கிம் போல் முடி வேண்டுமா?

டிரம்ப் - கிம் இரண்டாம் உச்சநிலைச் சந்திப்பு வரும் 27, 28 ஆம் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெறவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
டிரம்ப், கிம் போல் முடி வேண்டுமா?

படம்: REUTERS

டிரம்ப் - கிம் இரண்டாம் உச்சநிலைச் சந்திப்பு வரும் 27, 28 ஆம் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெறவிருக்கிறது.

உச்சநிலைச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் வியட்நாமில் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், முடி திருத்துபவர் ஒருவரின் வித்தியாசமான செயல் பலரைக் கவர்ந்துள்ளது.

இருநாட்டு தலைவர்கள் சந்திப்பின் நோக்கம்...அமைதி. அதைப் பாராட்டும் விதத்தில், வியட்நாமில் சிகை அலங்கார நிபுணர் ஒருவர் சலுகை ஒன்றை அளிக்க முடிவு செய்தார். தலைவர்கள் போல் முடி திருத்திக்கொள்ள ஆசைபடுபவர்கள் இலவசமாக முடி திருத்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை விடுத்தார்.

திரு. கிம்மை போலவே சிகையை திருத்திக் கொண்ட சிறுவன் ஒருவன், அவரைப் போலவே தோற்றமளிப்பதாகக் கூறி மகிழந்தான்.

சிலர் அதிபர் டோனல்ட் டிரம்ப் போல் முடிக்கு ஆரஞ்சு நிற சாயத்தையும் அடித்து கொள்கின்றனர்.

விளையாட்டாகத் தொடங்கிய செயல் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்திருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக முடி திருத்துபவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோரின் சிகையை சமூக ஊடகங்களில் பலர் விமர்சனம் செய்கின்றனர், பலர் பாராட்டவும் செய்கின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்