Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உள்ளளவும் நினைக்க வைக்கும் விதவிதமான உப்பு

சமையல் பொருள்களில் மிக முக்கியமானது உப்பு.

வாசிப்புநேரம் -
உள்ளளவும் நினைக்க வைக்கும் விதவிதமான உப்பு

(படம்: Pixabay)

சமையல் பொருள்களில் மிக முக்கியமானது உப்பு.

உப்பு இல்லாமல் உணவுக்கு ருசியே இல்லை!

நம் பெரியோர் சும்மாவா சொன்னார்கள் உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று?

ஆனால், உப்பிலே பல வகைகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா?

உப்பின் தோற்றம்:

வட சீனாவில் வெகுகாலத்துக்கு முன்பே உப்பு உற்பத்தி செய்யப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

அங்கு மக்கள் கி.மு. 6000 அல்லது அதற்கும் முன்பே, யுன்ஷெங் ஏரி (Lake Yuncheng) நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுத்தார்களாம்.

எகிப்தியர்கள் உப்பைப் பயன்படுத்தி, சடலங்களைப் பதப்படுத்தியதை நாமறிவோம்.

உப்பிட்ட பண்டங்களில் பாக்டீரியாக்கள் வளராததால், உணவைப் பாதுகாக்க, அது காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உப்பு வகைகள்:

  • சமையல் உப்பு (table salt)

Table salt பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட சோடியம் குளோரைடு (sodium chloride) உப்பாகும். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அதில் சில நேரம் அயோடின்(Iodine) சேர்க்கப்படுவதுண்டு.

  • இமாலய இளஞ்சிவப்பு உப்பு (Himalayan pink salt)

பாகிஸ்தானில் உள்ள ஒரு பெரிய உப்புச் சுரங்கத்தில் தயாராகிறது. அதில் இரும்பு ஆக்சைடு (iron oxide) இருப்பதால் இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டுள்ளது.

மற்ற வகை உப்புகளைவிடப் பலரும் இமாலய உப்பின் சுவையை விரும்புகிறார்கள்.

அதன் தனித்துவமான நிறத்தால், அந்த உப்பைப் பயன்படுத்திச் செய்யும் உணவுப் பொருள்கள் காண்போர் கண்ணுக்கும் விருந்தளிக்கும்.

  • கடல் உப்பு (sea salt)

சுத்திகரிக்கப்பட்ட உப்பைப் போல் இல்லாமல், கடல் உப்பு பெரும்பாலும் கரடுமுரடானது (coarse). அதில் மற்றவகை தாதுக்களோ (trace minerals), அழுக்குகளோ இருக்கக்கூடும்.

சாதாரண உப்பைவிட கடல் உப்பின் சுவை நன்றாக இருக்கும் என்பது பலரின் கருத்து.

  • கோஷர் உப்பு (kosher salt)

கோஷர் உப்பின் துகள்கள் அளவில் சற்றுப் பெரியன.

கரடுமுரடான அமைப்பைக் கொண்டிருக்கும்.

மாமிசத்திலிருந்து ரத்தத்தை பிரித்தெடுக்க அது பயன்படும்.

  • செல்டிக் உப்பு (Celtic salt)

செல்டிக் உப்பு என்ற ஒரு வகைக் கடல் உப்பு முதலில் பிரான்சில் பிரபலமானது.

சாம்பல் நிறத்தில் இருக்கும் அந்த உப்பு சற்று ஈரப்பதத்துடன் இருக்கும்.

சாதாரண உப்பை விட, அதில் சோடியத்தின் அளவு சற்றுக் குறைவு.


எல்லாம் சரி, இதில் எந்த வகை உப்பு சிறந்தது என்கிறீர்களா?

அதைத் தெரிந்துகொள்ள, 'செய்தி' இணையவாசலுடன் இணைந்து இருங்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்