Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புற ஊதாக் கதிரைப் (Ultra Violet Rays)பயன்படுத்தும் கருவி கைத்தொலைபேசி மீது உள்ள கிருமிகளை முற்றிலும் அழிக்குமா?

COVID-19 சூழலில், மக்கள் தங்கள் சுகாதாரப் பழக்கவழக்கங்கள், பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.

வாசிப்புநேரம் -
புற ஊதாக் கதிரைப் (Ultra Violet Rays)பயன்படுத்தும் கருவி கைத்தொலைபேசி மீது உள்ள கிருமிகளை முற்றிலும் அழிக்குமா?

(படம்: Pixabay)

COVID-19 சூழலில், மக்கள் தங்கள் சுகாதாரப் பழக்கவழக்கங்கள், பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.

குறிப்பாக, நாள் முழுதும் அதிகமாகப் பயன்படுத்தும் கைத்தொலைபேசி மீது கிருமி படியாமல் இருப்பதை உறுதிசெய்வதில் பலர் கவனம் செலுத்துகின்றனர்.

கைத்தொலைபேசியைச் சுத்தம் செய்ய, புற ஊதாக் (UV) கதிர்களை வெளியிடும் கருவியை வாங்கக்கூட சிலர்
முற்படுகின்றனர்.

புற ஊதா ஒளிக்கற்றைகள் பொதுவாக மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சைக்கான கருவிகளையும், மருத்துவமனை அறைகளையும் கிருமிநீக்கம் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், புற ஊதாக் கதிர்களைக் கொண்டு கைத்தொலைபேசியைச் சுத்தம் செய்யும் கருவிகளுக்கான தேவை சற்று அதிகரித்து வருகிறது.

இணைய வர்த்தகத் தளங்களில், அவை பொதுவாக, 19 வெள்ளி முதல் 55 வெள்ளி வரை விற்கப்படுகின்றன.

அந்தக் கருவி உண்மையிலேயே கிருமியை அகற்றுமா?
அது எவ்வாறு கிருமியை அழிக்கிறது?

  • புற ஊதாக் கதிர்களை வெளியிடும் கருவிகள் பெட்டிகளாக அல்லது கோல் வடிவில் உருவாக்கப்படுகின்றன.
  • கிருமிநீக்கம் செய்யக் கைத்தொலைபேசியைப் பெட்டிக்குள் வைக்கவேண்டும் அல்லது கோலைக் கொண்டு கைத்தொலைபேசியை வருடவேண்டும்.
  • புற ஊதா ஒளிக்கற்றைகளில் A,B,C என 3 வகைகள் உள்ளன.
  • C வகைக் கதிர் மட்டுமே கிருமிகளை அழிக்கும்
  • அந்தக் கதிர் கிருமியின் மரபணுவைச் சேதப்படுத்தும். அதனால் கிருமி, மற்றவர்களைத் தொற்றும் ஆற்றலை இழந்துவிடுகிறது.

இருப்பினும் கருவிகள் ஒழுங்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றால், பயன் ஏதும் இல்லாமல் போகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • C வகைக் கதிர்களை வழவழப்பான மேற்பரப்பின் மீது பயன்படுத்தினால், கிருமி அதிக அளவில் அழிக்கப்படும்.
  • கரடுமுரடான மேற்பரப்புகளில், கிருமி மறைந்துகொள்ள ஏதுவாகப் பல இடங்கள் இருக்கும். அந்த இடங்கள் மீது கதிர்கள் படாமல் போகலாம்.
  • கைத்தொலைபேசியின் பாதுகாப்பு உறை, பொத்தான்கள் மீது உள்ள கிருமியை முழுமையாக அழிக்க இயலாது.

வேலை இடங்களுக்குச் சென்று மற்றவர்களுடன் சேர்ந்து பணிபுரியும் நபர்களுக்கும் பிள்ளைகளோடு அதிக நேரம் செலவிடும் நபர்களுக்கும் இந்தக் கருவி பயனளிக்கும் என்று கருதப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்