Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சரியாக நடக்கிறீர்களா? தெரிந்துகொள்ளுங்கள்!

நாம் நடக்கும் விதம் நம்மை உடல்ரீதியாகப் பாதிக்கலாம் என்பது சிலர் மட்டுமே அறிந்த உண்மை. நடைபோடுவதிலும் சரி, தவறு இருக்கிறது... 

வாசிப்புநேரம் -
சரியாக நடக்கிறீர்களா? தெரிந்துகொள்ளுங்கள்!

(படம்: Pixabay)

நாம் நடக்கும் விதம் நம்மை உடல்ரீதியாகப் பாதிக்கலாம் என்பது சிலர் மட்டுமே அறிந்த உண்மை. நடைபோடுவதிலும் சரி, தவறு இருக்கிறது...

நாம் எப்படி நடக்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது மிக முக்கியம். மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, களைப்பு, தசை பலவீனம் அடைதல் ஆகியவற்றைத் தவிர்க்க சரியான முறையில் நடக்கவேண்டும்.

சரியாக நடப்பது எப்படி?

  • செல்லும்போது, தலையை நேரே வைத்துக்கொண்டு நடக்கவேண்டும். கண்கள் 10-20 அடி முன்னால் உள்ள அம்சங்களைப் பார்க்கவேண்டும்.
  • நேரே பார்த்து நடத்தல்

நடந்து - முதுகை நேராக வைத்து நடத்தல்

  • முதுகை வளைத்து நடப்பதைத் தவிர்ப்பது சிறப்பு - முதுகை வளைத்து நடப்பதால் முதுகில் உள்ள தசைமீது அழுத்தம் செலுத்தப்படும்


தோள்பட்டையை சற்று பின்னோக்கி வைத்து நடத்தல்

  • தோள்பட்டையை முன்னோக்கி வைத்து நடப்பது கழுத்து, முதுகின் மேல், கீழ்ப் பகுதிகளில் உள்ள தசைகளைப் பலவீனப்படுத்தும்.
  • வயிற்றை உள்ளே இழுத்தல்

வயிற்றின் தசையை உள்நோக்கி இழுத்து வைத்திருப்பது போன்ற நிலையில் நடப்பது சிறப்பு.

கைகளை முன்னும் பின்னும் அசைத்து நடத்தல்

  • கைகளைத் தோள்களிலிருந்து முன்னும்பின்னும் அசைத்து நடக்கும்போது எளிமையாக நேரே நடக்கலாம்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் செயல்படுமாறு நடத்தல்

  • நடக்கும்போது குதிகாலை முதலில் தரையில் வைத்த பிறகே கால்விரல்களைத் தரையில் செலுத்தவேண்டும்.
  • பாதங்களைத் தரையில் இழுத்து நடப்பதைத் தவிர்க்கவேண்டும்.

சரியான முறையில் நடந்து நம் உடலைப் பாதுகாப்போம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்