Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விமானத்தில் விநோதமான சகபயணி...என்ன செய்யலாம்?

விமானத்தில் செல்லும்போது பலதரப்பட்டவர்களோடு நாம் சேர்ந்து பயணம் செய்யவேண்டியிருக்கும். அவர்களில் சிலரது பழக்க வழக்கங்களோ நம்மைத் திகைக்கச் செய்யும்.

வாசிப்புநேரம் -

விமானத்தில் செல்லும்போது பலதரப்பட்டவர்களோடு நாம் சேர்ந்து பயணம் செய்யவேண்டியிருக்கும். அவர்களில் சிலரது பழக்க வழக்கங்களோ நம்மைத் திகைக்கச் செய்யும்.

சிலர் இரவு விமானப் பயணங்களில், இரவு ஆடைகளுக்கு மாற்றித் தூங்கத் தயாராவதுண்டு. விமானத்தை அவர்கள் வீட்டைப் போலப் பயன்படுத்துவது பலருக்கும் விநோதமாகவே தென்படும்.

சிலரோ, தங்கள் காலணிகள், காலுறைகளை அகற்றித் தங்களுக்கு முன் உள்ள இருக்கையின்மீது காலை வைப்பதைப் பழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.

சிலரோ ஒரு படி மேல் சென்று நகங்களை வெட்ட விமானப் பயணத்தை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொள்வார்கள். நகப் பூச்சுத் தடவிக் கொள்ளவும் விமானப் பயணத்தைப் பயன்படுத்திக்கொள்வார்கள் சிலர்.

ஆகாயத்தில் 30,000 அடி உயரத்தில் பறக்கும் போது அருவருப்பூட்டும் செயல்கள் பக்கத்தில் நடக்கும்போது விமானத்திலிருந்து நம்மால் இறங்க முடியாது.

அதற்கு பதிலாக விமானச் சிப்பந்தியிடம் இடத்தை மாற்றித் தருமாறு கேட்கலாம். விமானத்தில் வேறு இருக்கைகள் இல்லாவிடில், நடைபாதையில் நடக்கச் செல்லலாம்.

பொறுத்துப் பார்த்தும் அவர்கள் தங்கள் செயல்களை நிறுத்தவில்லை என்றால், நல்ல விதத்தில் அவர்களிடம் எடுத்துக் கூறலாம்.

விமானப் பயணங்கள் அனைத்தும் ஒரு வழியாக முடிந்துவிடும் அதனால் பொறுமையைக் கடைப்பிடிப்பதே நன்று !


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்