Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஒரு டிரில்லியன் வெள்ளியை வைத்து என்னவெல்லாம் வாங்கலாம்?

Microsoft நிறுவனத்தின் மதிப்பு முதல்முறையாக ஒரு டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது.

வாசிப்புநேரம் -
ஒரு டிரில்லியன் வெள்ளியை வைத்து என்னவெல்லாம் வாங்கலாம்?

கோப்புப் படம்: AFP/Roslan Rahman

மில்லியன், பில்லியன் என்று அடிக்கடி பேசி வந்த நாம் இப்போது டிரில்லியன் குறித்தும் பேசுகிறோம்.

ஒரு டிரில்லியன் - 1,000,000,000,000.......

ஒரு டிரில்லியன் வெள்ளி கிடைத்தால் என்னவெல்லாம் வாங்கலாம்? ஒரு கற்பனை....

- சாங்கி ஜுவெல் போன்ற ஒரு கடைத்தொகுதியின் மதிப்பு 1.7 பில்லியன் வெள்ளி - 588 கடைத்தொகுதிகளை வாங்கலாம்.

- செந்தோசா கோவ்வில் (Cove) ஒரு தரை வீட்டின் விலை சுமார் 33 மில்லியன் வெள்ளி - 30,300 வீடுகள் வாங்கலாம்.

- உலகின் ஆக விலையுயர்ந்த Mark ஹோட்டலில் ஓர் இரவு தங்க 102,000 வெள்ளி - சுமார் 9,800,000 இரவுகள் தங்கலாம்.

- மாலத்தீவில் ஒரு தீவின் விலை சுமார் 12 மில்லியன் வெள்ளி - 82,000 தீவுகள் வாங்கலாம்.

- உலகின் ஆக விலையுயர்ந்த Royal Caribbean's Symphony of the Seas சொகுசுக் கப்பலின் விலை 1.84 பில்லியன் வெள்ளி - 543 கப்பல்கள் வாங்கலாம்

- உலகின் ஆகப் பெரிய Pink Star வைரத்தின் விலை 97 மில்லியன் - 10,300 வைரங்கள் வாங்கலாம்.

--உலகின் ஆக விலையுயர்ந்த தனியார் விமானத்தின் விலை 680 மில்லியன் வெள்ளி - 1,470 விமானங்களை வாங்கலாம்.

இந்நேரம் உங்கள் கற்பனைக் குதிரையும் கிளம்பியிருக்கும். எங்கள் Facebook பக்கத்தில் அதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்