Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

குளிர் பதனப் பெட்டியில் வைக்கக்கூடாத 5 உணவு வகைகள்?

குளிர் பதனப் பெட்டிகள் நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் எளிதில் கெட்டுப் போகாமல் அவற்றின் ஆயுள்காலத்தை நீட்டிக்கின்றன.

வாசிப்புநேரம் -

குளிர் பதனப் பெட்டிகள் நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் எளிதில் கெட்டுப் போகாமல் அவற்றின் ஆயுள்காலத்தை நீட்டிக்கின்றன.

ஆனால் சில உணவு வகைகளை நாம் குளிர்ப் பதனப் பெட்டியில் வைக்கத் தேவையில்லை. சில உணவுப் பொருள்களைக் குளிர் பதனப் பெட்டியில் வைப்பதால் அவை எளிதில் கெடுகின்றன.

அவற்றில் சில இதோ:

(படம்: Pixabay)

1) உருளைக்கிழங்கு - உருளைக்கிழங்குகளைக் குளிர் பதனப் பெட்டியில் வைப்பதால் அவற்றிலுள்ள மாவுச்சத்தின் தன்மை மாறி அதிக சர்க்கரை உருவாகிறது. கிழங்குகளும் சாப்பிடும் போது நர நரவென்று இருக்கும். அதற்கு பதிலாக கிழங்குகளைக் காகிதப் பைகளில் போட்டு, அதிக வெப்பம் இல்லாத இடத்தில் வைத்திருக்கலாம்.

2) காப்பித் தூள் - குளிர் பதனப் பெட்டியில் வைப்பதால் காப்பித் தூளில் ஈரப் பசை அதிகரிக்கிறது. அதனால் காப்பியின் சுவையும் மாறுகிறது. காப்பித் தூளைக் காற்றுப் புக முடியாத பெட்டியில் அடைத்து, வெளியில் வைக்கலாம்.

(படம்: Unsplash/Manki Kim)

3) ரொட்டி - ரொட்டியைக் குளிர் பதனப் பெட்டியில் வைப்பதால் அதன் ஆயுள்காலம் நீட்டிக்கப்படுகிறது ஆனால் அதன் சுவை மாறிவிடும். குளிர் பதனப் பெட்டி ரொட்டியிலுள்ள ஈரப் பதத்தை உறிஞ்சிவிடும்.

4) தேன் - குளிரில் தேனில் உள்ள சர்க்கரை கெட்டியாகிவிடுகிறது, இதனால் தேனின் தன்மை மாறும். பொதுவாகத் தேனுக்குக் காலாவதித் தேதி கிடையாது. அதனால் அதை நீண்ட காலம் வெளியில் வைத்திருக்கலாம்.

5) தக்காளி - தக்காளியைக் குளிர் பதனப் பெட்டியில் வைக்கும் போது தட்ப நிலையின் காரணமாக அவற்றில் சுவை குறைகிறது, அதனுடன் அவற்றை உண்ணும் போது மாவு போன்ற தன்மை உருவாகும். சிறிய அளவில் தக்காளியை வாங்கி அதை ஒரு வாரத்தில் பயன்படுத்தி விடுவது நல்லது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்