Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் முகக்கவசத்தை உருவாக்கியது யார்?

வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்சங்களில் ஒன்றாய்  ஆகி விட்டது முகக் கவசம். 

வாசிப்புநேரம் -

வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்சங்களில் ஒன்றாய் ஆகி விட்டது முகக் கவசம்.

அறுவை சிகிச்சையின் போது அணியும் முகக்கவசத்தை உருவாக்கியது யார்? என்றாவது சிந்தித்தது உண்டா?

மலேசியாவைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் காலஞ்சென்ற வூ லியென் தெ (Wu Lien-teh) அந்த முகக் கவசத்தை முதன்முதலில் உருவாக்கினார்.

அவருடைய 142வது பிறந்தநாளை முன்னிட்டு, கூகளின் முகப்புப் பக்கத்தில் இன்று அவருடைய சித்திரம் இடம்பெற்றுள்ளது.

சீனாவிலிருந்து மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் குடியேறிய தம்பதியின் மகன் டாக்டர் வூ.

1879, மார்ச் 10ஆம் தேதி அவர் பிறந்தார்.

Cambridge பல்கலையில் மருத்துவப் பட்டம் பெற்ற சீன வம்சாவளி மாணவர்களில் முதலாமவர் என்ற பெருமை அவரைச் சேரும்.

1935 இல், நோபெல் பரிசுக்கு முன்மொழியப்பட்ட முதல் மலேசியரும் அவரே என்று Malay Mail செய்தி நிறுவனம் கூறியது.

அப்போது, சீனாவில் ஏற்பட்டிருந்த அடையாளம் காணப்படாத கிருமித்தொற்று, சுவாசத்தின் மூலம் மனிதர்களிடையே பரவக்கூடியது என்பதை டாக்டர் வூ கண்டுபிடித்தார்.

பிறகு, கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பருத்தியால் ஆன முகக்கவசத்தை அவர் உருவாக்கினார்.

பொதுமக்கள் அதை அணியுமாறும், அரசாங்கம் தனிமைப்படுத்தும் நிலையங்களை அமைக்குமாறும் டாக்டர் வூ வலியுறுத்தினார்.

அவருடைய கண்டுபிடிப்புகள், பரிந்துரைகள் ஆகியவற்றின் மூலம், "மன்சுரியன் பிளேக்" எனப்படும் அந்தக் கொள்ளைநோய் நான்கு மாதங்களிலேயே துடைத்தொழிக்கப்பட்டதாக Malay Mail தெரிவித்தது.

தற்போது உலகெங்கும் கொரோனா கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தவும் டாக்டர் வூவின் வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்