Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அமெரிக்கா: வேலையிடங்களில் கிடைக்கும் உணவு ஆரோக்கியமானதா?

அமெரிக்க வேலையிடங்களில் கிடைக்கும் உணவு  ஆரோக்கியமற்றதாக உள்ளதாய் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: வேலையிடங்களில் கிடைக்கும் உணவு ஆரோக்கியமானதா?

கோப்புப் படம்: REUTERS/Kai Pfaffenbach

அமெரிக்க வேலையிடங்களில் கிடைக்கும் உணவு  ஆரோக்கியமற்றதாக உள்ளதாய் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு வாரம் நடத்தப்பட்ட ஆய்வில் 5,200 பேர் பங்கேற்றனர்.

அவர்களில், நால்வரில் ஒருவர், ஒன்றுக்கு மேற்பட்ட முறை வேலையிடத்தில் உணவு வாங்கி உண்டதாகத் தெரிய வந்தது.

அவர்கள் உட்கொண்ட உணவில் கலோரியின் அளவு அதிகமாக இருந்தது.

அத்துடன் உப்பு, கொழுப்பு, சீனி ஆகியவற்றின் அளவும் மிகுதியாகக் காணப்பட்டது.

வாரந்தோறும் அவர்கள் சுமார் 1,300 கலோரி அளவுள்ள உணவை உட்கொண்டதாக Journal of the Academy of Nutrition and Dietetics சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்