Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

படங்களை வெட்டித் தொகுக்கும் அம்சங்களுடன் YouTube Shorts எனும் குறுகிய வடிவக் காணொளித் தளம் சிங்கப்பூரில் அறிமுகம்

YouTube Shorts எனும் YouTube-இன் குறுகிய வடிவக் காணொளித் தளம் இப்போது சிங்கப்பூரில் அறிமுகமாகியுள்ளது.

வாசிப்புநேரம் -

YouTube Shorts எனும் YouTube-இன் குறுகிய வடிவக் காணொளித் தளம் இப்போது சிங்கப்பூரில் அறிமுகமாகியுள்ளது.

உள்ளடக்க உருவாக்குநர்கள், அதிலுள்ள படங்களை வெட்டித் தொகுக்கும் (editing) அம்சத்தைப் பயன்படுத்தித் தங்களுடைய
கைத்தொலைபேசியிலேயே சின்னச் சின்னக் காணொளிகளை உருவாக்கலாம்.
தளத்தின் முன்னோட்ட beta பதிப்பு, இன்று (ஜூலை 13) வெளியானது.

சென்ற ஆண்டு செப்டம்பரில் முதலில் அது அறிவிக்கப்பட்டு, பின்னர் 26 நாடுகளில் அறிமுகமானது.

இப்போது சிங்கப்பூர் உள்பட, உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் அது கிடைக்கப்பெறுகிறது.

பல காணொளிகளை ஒன்றாக இணைத்தல், இசையுடன் பதிவுசெய்தல், குறிப்பிட்ட பகுதிகளில் வாசகங்களைச் சேர்த்தல்-என்று பயனீட்டாளர்கள் இப்போது தங்கள் காணொளிகளில் விதவிதமான திருத்தங்களைச் செய்யமுடியும்.

Shorts, தற்போது உள்ள YouTube அம்சத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.

YouTube-இன் கூற்றுப்படி, உலக அளவில் Shorts தளம், தினமும் 6.5 பில்லியனுக்கு மேற்பட்ட முறை பார்வையிடப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்