Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விண்வெளியில் புதிய நாடு, நீங்களும் குடிமகன் ஆகலாம்

விண்வெளியில் தற்போது ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த நாட்டின் பெயர் அஸ்கார்டியா (Asgardia).

வாசிப்புநேரம் -
விண்வெளியில் புதிய நாடு, நீங்களும் குடிமகன் ஆகலாம்

படம்: Pixabay

விண்வெளியில் தற்போது ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த நாட்டின் பெயர் அஸ்கார்டியா (Asgardia).

அதில் இதுவரை 200,000 பேர் குடிமக்களாகப் பதிந்து கொண்டுள்ளனர். அதற்கு ஒரு நாடாளுமன்றமும் இருக்கிறது.

நிலாவின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது அந்த நாடு. ரஷ்யாவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கடந்த வாரம் அந்த நாட்டிற்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்து வரும் 10 ஆண்டிற்குள் அதன் குடிமக்கள் எண்ணிக்கையை 150 மில்லியனாக உயர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இன்னும் 25 ஆண்டுகளில் மனிதர்கள் அங்கு நிரந்தரமாக வசிக்க எல்லா வசதிகளும் அமைக்கபட்டு வருவதாகவும் அந்த நாட்டு அமைப்பு தெரிவித்தது.

அந்த விண்வெளி நாட்டில் இதுவரை 200 நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடிமக்களாகப் பதிவு செய்துள்ளனர்.

உலகிலுள்ள புத்தாக்கமிக்க 2 விழுக்காடு மக்களை அதன் குடிமக்களாக்க வேண்டும் என்பது இலக்கு.

அஸ்கார்டியாவில் குடிமகனாக வேண்டும் என்றால், ஒரு தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்